திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நீண்டகாலமாக நிலுவையிலிருந்த (2012- 2018 ஆண்டுகள் வரை) Mphil உயர்கல்விக்காக இறுதியாக 47 பேருக்கான கோப்புகளை சென்னை இயக்குநர் அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வி இணை இயக்குநர் JDP மதிப்புமிகு.பொன்னையா அவர்களால் கோரப்பட்டது. திண்டுக்கல் CEO அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் அறை எழுத்தர் மூலம் சென்னை வரவழைக்கப்பட்டு இணை இயக்குநர் G.O.101 நாள் 18.5.2018க்கு முன் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து கோப்புகளுக்கும் அனுமதி ஆணை வழங்கியுள்ளார். 18 க்கு பின் விண்ணப்பித்தவற்றிற்கு அனுமதி ஆணை வழங்கவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே வழங்கலாம் என சில கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டது. அனுமதி ஆணை வழங்கிய திரு. JDP அவர்களை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறது.💐💐💐💐💐
M.PHIL கடந்து வந்த பாதை .
நமது பேரியியக்கம் பல முயற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வெற்றிகண்டது. CEO திருமதி.சுபாஷினி அம்மையார் காலத்தில் அனுப்பப்பட்ட கோப்புகள் கடுமையான வெள்ளத்தில் காணாமல் போய் சென்னை DPI அலுவலகம் சேராமல் இருந்தது.அன்றிலிருந்து நிலுவை தொடங்கியது. திரு.சாந்தகுமார் CEO அவர்களிடம் பலமுறை முறையிட்டும் பணி மேற்கொள்ளாமல் இருந்தது. நமது அமைப்பு அவரை முற்றுக்கையிட்டபோது நான் இந்த மாதம் ஓய்வுபெற்று இந்த வழியாகத்தானே செல்வேன். நான் அனுமதி கொடுக்கவில்லையென்றால் என்னை விடாமல் கேட்டை பூட்டிக்கொள்ளுங்கள் என்றார். அந்த காலகட்டங்களிலும் அவர் பணியேற்ற நாள் முதல் உயர் கல்விக்கு விண்ணப்பித்த அனைத்து அனுமதிகளையும் தவறாது முறையாக வழங்கினார். அதோடு எங்களின் கோரிக்கையை ஏற்று சமாபந்தி நடத்தி உண்மைத் தன்மை, உயிர் கல்வி அனுமதி,தேர்வு நிலை உட்பட அனைத்தும் வழங்கினார். அவர் காலத்திற்கு முன் விண்ணப்பித்த 17 ஆணைகளை பணி ஓய்வு அன்று கூட வழங்கினார். அப்பொழுதும் திருமதி.சுபாஷினி அம்மையார் காலத்திலிருந்து நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
CEO.திரு.மணிவண்ணன் அவர்களிடம் பலமுறை முறையிட்டும் ஒன்றும் செய்யவில்லை. RTI யில் கோரப்பட்ட தகவல்களையும், முறையாக அனுமதிகோரி HM to CEO அவர்கள் சென்னைக்கு பரிந்துரைத்த கடிதங்களை மாவட்ட அமைப்பின் அறிவுறுத்தலை ஏற்று நிறுவனர் Dr.அ.மாயவன் அவர்கள், தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்களின் முன்னிலையில் நேரடியாக ஆணையர் மதிப்புமிகு. சிஜிதாமாஸ் அம்மா அவர்களிடம் திண்டுக்கல் CEO அவர்கள் அனுமதி அளிக்க மறுக்கிறார் என முறையிட்டேன். வாங்கி பார்த்துவிட்டு முறையாக விண்ணப்பித்து பயின்றவர்களுக்கு அனுமதி வழங்க முயற்சி எடுக்க கோரினார். மதிப்புமிகு.பள்ளி கல்வித்துறை இயக்குநர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மதிப்புமிகு.இணை இயக்குநர் அவர்கள் மதிப்புக்கு. பொன்னையா அவர்கள் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .இன்று பலர் பேசலாம் நாங்கதான் என்று, எங்கள் உழைப்பு ஒரு போதும் வீண்போகாது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் எக்காரியத்திலும் ஆசிரியர்-மாணவர் நலனில் போர்குணம் கொண்டு பாடுபடும்.....
இனி எங்களின் அடுத்த பயணம்
தனியார் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பட்டப்படிப்பு. (B.Ed) உட்பட முதுகலை, உயர்கல்விக்கு ஆணைகளை பெற்றுத்தருவது.
பட்டதாரிகளுக்கு மட்டுமே HM. பதவி (உயர்நிலைபள்ளியில்)
என்றும் ஆசிரியர்-மாணவர் நலனில்
நிறுவனர் Dr.அ.மாயவன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
திண்டுக்கல் மாவட்டம்