கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில் பணிபுரியும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர தொகுப்பூதியத்தை, 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரமாக உயர்த்தியும், தற்போது பணிபுரியும், 4 ஆயிரத்து, 84 கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 14 மாதங்களுக்கான நிலுவை தொகையும் ஒப்படைக்கவும் அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து, உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கவுரவ விரிவுரையாளர்களின் பணித்தன்மையையும், கல்வி தகுதியினையும் கருத்தில் கொண்டு, சுழற்சி 1, 2ல் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்ட மாதந்திர தொகுப்பூதியத்தை, 15 லிருந்து, 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த, 14 மாதங்களாக நிலுவையில் உள்ள விரிவுரையாளர்களுக்கு சேர வேண்டிய, 28 கோடியே, 58 லட்சம் தொகையும் ஒப்படைக்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.