கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முதன் முதலில் பொது ஊரடங்கு தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், நடைமுறைக்கு வந்தது.
அப்போது, வாகனங்களில் சுற்றுவோரைக் கட்டுப்படுத்துதல் சார்ந்து காவல்துறையினருக்குப் பகிரப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒலிப்பதிவு தற்போது தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.
அப்பதிவில், இருசக்கர வாகனத்தில் வருவோரின் வாகனங்களைக் கைப்பற்றுங்கள் என்று கூறும் பதிவு இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் இப்பதிவு மட்டும் வெட்டி பகிரப்படுகிறது.
முழுமையான ஒலிப்பதிவில் பணிக்குச் செல்வோரை அனுமதிக்க நாளை மட்டும் ID Card இருந்தால் போதும். சனிக்கிழமை முதல் Bar Code உள்ள அனுமதி அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென அலுவலர் ஒருவர் வயர்லஸில் கட்டளை பிறப்பிக்கிறார்.
நிற்க.
இன்று (09.05.21) ஞாயிறு. நாளை திங்கள் எனில் நாளை மறுதினம் செவ்வாய் தானே பின் எப்படி அந்த அலுவலர் நாளை மறுதினம் சனிக்கிழமை என்கிறார்? ? ? ?
சொல்கிறேன். . .
சென்ற ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 25.3.2020 புதன் .
மேற்படி ஒலிப்பதிவு 26.3.2020 வியாழக்கிழமை அன்று காவல்துறையினருக்கான கட்டளையாக வயர்லெஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த நாள் வெள்ளி (27.3.2020) அன்று ID Card இருந்தாலே அனுமதித்து விடுங்கள். சனிக்கிழமை (28.3.2020) முதல் Bar Code இருந்தால் மட்டுமே அனுமதியுங்கள் என்பதே அவ்வொலிப்பதிவின் காலம் என்பது எனது புரிதல்.
எனவே, சென்ற ஆண்டிற்கான ஊரடங்கு நடைமுறையை இப்போது பகிர்வது என்பது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதோடே கடைகளில் அதீத கூட்டத்தையும் சேர்த்துவிடும்.
10.05.2021 முதல் 24.05.2021 வரை பொது ஊரடங்கு என்றாலும் மளிகை, காய்கறி, இறைச்சி, பால், மருந்து உள்ளிட்ட மிகமுக்கியப் பொருட்களின் தேவையை அன்றன்றைக்கு நிறைவு செய்து கொள்ளும் வகையில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12:00 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தேவையிருந்தால் மட்டும் உங்கள் பகுதிகளிலேயே உள்ள கடைகளுக்குச் சென்று வாங்கி வாருங்கள். தேவையின்றி கூட்டம் கூட்டி பொது முடக்கத்தைப் பயனற்றதாக்கிவிட வேண்டாம்.
தனிநபர் முகக்கவசம்!
தாய்நாட்டின் உயிர்க்கவசம்!!
நம்மோடே சேர்த்து நாட்டைக்காக்க முகக்கவசம் கொண்டு மூக்கையும் வாயையும் ஒருசேர மூடுங்கள்!
நன்றி : தி இன்டியன் எக்ஸ்பிரஸ் (படம்)
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
2020 ஊரடங்கில் வெளியான Bike பறிமுதல் Audio-வை தற்போது பரப்பி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தாதீர்!!
2020 ஊரடங்கில் வெளியான Bike பறிமுதல் Audio-வை தற்போது பரப்பி தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தாதீர்!!
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |