தமிழகத்தில் மளிகை கடைகள் மூன்று நாட்கள் மூடல் – வணிகர் சங்கத்தினர் அறிவிப்பு!!
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மளிகை கடைகளும் மூன்று நாட்கள் மூடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மளிகை கடைகள் மூடல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் 33 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 300 க்கு அதிகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக சென்னிமலையில் அனைத்து மளிகை கடைகளும் மூன்று நாட்கள் மூடபட உள்ளது.
இதுகுறித்து அம்மாவட்ட வணிகர் சங்க தலைவர் நடராஜ் கூறியதாவது,” சென்னிமலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. அரசு தெரிவித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை”
“மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதாக தினமும் மளிகை கடைகளில் கூட்டமாக
நிற்கின்றனர். எனவே கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. நிலைமையை சரி
செய்ய மூன்று நாட்கள் சென்னிமலை பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.