யார் ஒருவருடைய பதவி உயர்வை தமிழகமே கொண்டாடுகிறதோ அவரே உண்மையான, நேர்மையான தலைவன்...வாழ்த்துகள் சார். தமிழக டிஜிபி பணியிடத்திற்கு சாலச் சிறந்தவரை நியமணம் செய்தது, தமிழக இளைஞர்களுக்கு மிக்க மகிழ்ச்சி... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


யார் ஒருவருடைய பதவி உயர்வை தமிழகமே கொண்டாடுகிறதோ அவரே உண்மையான, நேர்மையான தலைவன்...வாழ்த்துகள் சார். தமிழக டிஜிபி பணியிடத்திற்கு சாலச் சிறந்தவரை நியமணம் செய்தது, தமிழக இளைஞர்களுக்கு மிக்க மகிழ்ச்சி...


 யார் ஒருவருடைய பதவி உயர்வை தமிழகமே கொண்டாடுகிறதோ அவரே உண்மையான, நேர்மையான தலைவன்...வாழ்த்துகள் சார்.
தமிழக டிஜிபி பணியிடத்திற்கு சாலச் சிறந்தவரை நியமணம் செய்தது, தமிழக இளைஞர்களுக்கு மிக்க மகிழ்ச்சி...
காரணம் TNPSC, UPSC Aspirantகளின் தன்னம்பிக்கை நாயகர், சமூக செயற்பாட்டாளர், வேளாண்மை கற்ற பன்முக திறனாளர்..

"மரியாதைக்குரிய மனிதர்!' தமிழ்நாட்டின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக சைலேந்திரபாபு  ஐ.பி.எஸ்... நியமனம் வாழ்த்துகள்🎉🎊

வரலாறு....

1962 ஜூன் 5 ஆம் நாள் பிறந்த முனைவர் சைலேந்திர பாபு, 1987 ல் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆகப் பணியைத் தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் (ADGP ) பணியாற்றினார்.
ஒரு பேட்டியில்; என் குடும்பத்தில் மொத்தம் எட்டு பிள்ளைகள். நான் ஆறாவது பையன். என் அப்பா, இந்திய ராணுவ கப்பல் பிரிவில் பணியில் இருந்தார். பின், கேரள போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்தார். படிப்பில், பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில்,முதல் மாணவன் என்ற பெருமையுடன் வெளியேவந்தேன்.ஏழாம் வகுப்பு வரை பள்ளியில் நான் சுமாரான மாணவனாக, சக மாணவர்களுடன் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். எட்டாம் வகுப்பில், சதானந்தவள்ளி ஆசிரியையின் கண்டிப்பு தான், என்னை சிறந்த மாணவனாக உருமாற்றியது.ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியராக வந்த ராமசாமி சார், என் வாழ்வில் மறக்க முடியாத மரியாதைக்குரிய மனிதர்.
என் ஆங்கிலப் புலமையைப் பார்த்து, என்னை என்.சி.சி.,யில் சேர்த்துக் கொண்டார். அங்கு, என் ஈடுபாட்டைப் பார்த்து, 100 மாணவர்களுக்கு தலைவராக, பொறுப்பான பதவி கொடுத்தார்.போலீஸ் துறை மீது ஈடுபாடு வருவதற்கு, அவர் தான்முக்கிய காரணம்.
ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி
ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றதை, என் அப்பாவிற்குக் கூட தெரிவிக்காமல், அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நான் சந்திக்கச் சென்றது, ராமசாமி சாரை தான்.ஆனால், அவர் உயிருடன் இல்லை. உள்ளுக்குள் அழுதபடியே, அவர் படத்தின் முன் நின்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். என்னை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்காம லேயே, அவர் மறைந்து விட்டார் .

பதவிகள்

காவல்துறை கூடுதல் இயக்குனர் (ADGP) கடலோர காவல் படைக்குழு, தமிழ்நாடு
பதவியேற்பு - ஏப்ரல் 23, 2012
காவல் துறை தலைவர் (IG ), வடக்கு மண்டலம்,தமிழ்நாடு
பதவியில் - ஜூன் 8, 2011 – ஏப்ரல் 23, 2012
காவல்துறை ஆணையாளர்,கோயம்புத்தூர் தமிழ்நாடு
பதவியில் - பிப்ரவரி 21, 2010 – ஜூன் 8, 2011
காவல்துறை தலைவர் (IG ), தமிழ்நாடு காவல்துறை சிறப்பு அதிரடிப்படை தலைவர்
பதவியில் - செப்டம்பர் 11, 2008 – பிப்ரவரி 21, 2010
ஒரு சிறந்த மனிதராக:
திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ்,சென்னை சாலை விபத்தில் உயிருக்கு போராடும் ஒரு பெண்ணை தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்.
விபத்து நடந்தவுடன் அந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் இருங்கள் ஆம்புலன்ஸ் வரட்டும் என்று சொன்னார்கள் அந்த வழியாக வந்த திரு.சைலேந்திர பாபு.ஐ.பி.எஸ், அவர்கள் உடனே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார் வேடிக்கை பார்க்கிறீர்கள் இந்த டிராஃபிக்ல் ஆம்புலன்ஸ் எப்பொழுது வருவது என்று தானே அந்த மயங்கி ரத்தம் சொட்டியநிலையில் இருந்த பெண்ணை. தன் பதவியையும் பொருட்படுத்தாமல் தூக்கி தனது காரிலேயே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார் ..
சின்ன சின்ன பதவியில் இருப்பவர்கள் கூட பந்தா காட்டிக் கொண்டு செய்ய யோசிப்பார்கள் ... ஆனால் ஒர் உயர் அதிகாரி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் செய்த காரியம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது!
இதில் இருந்து ஒன்று புரிந்தது ...
மனிதாபிமானத்திற்கு எதுவும் தடையில்லை ...
நாம்தான் மனிதநேயத்திற்கு தடையாக இருக்கிறோம் ...
எப்பவுமே போலிசை திட்டி தீர்க்கும் நாம்....
இதற்காகவாது பாராட்டலாமே !
நாமும் கொஞ்சம் திருந்தலாமே..
கோவையில் 10 வயது சிறுமியையும், அவள் தம்பியையும் பள்ளி செல்லும்போது கடத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் இருவரையும் தண்ணீரில் தள்ளி கொடூரமாகக் கொன்ற மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணனை போலீஸார் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர்.
கோவை ரங்கே கெளடர் வீதியைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை அதிபர் ரஞ்சித் ஜெயின். இவரது மகள் முஷ்கான் (11), அவளது தம்பி ரித்திக் ஜெயின் (8). இருவரையும் காரில் கடத்திச்சென்று சிறுமியைக் கற்பழித்து பின்னர் இருவரையும் பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் தள்ளி விட்டுக் கொலை செய்ததாக மோகனகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளி மனோகரன் என்பவனை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இருவரையும் செட்டிக்குளம் பகுதிக்கு முதலில் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
வெள்ளளூர் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வந்த போது, மோகனகிருஷ்ணன் திடீரென போலீசாரின் துப்பாக்கியைப் பிடுங்கி போலீசாரை சுட்டுவிட்டு தப்பி ஓடினான். இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி மற்றும் முத்துமாலை ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, மோகனகிருஷ்ணனை துப்பாக்கியால் சுட்டார். இதில் நெற்றி, இடுப்பில் குண்டு பாய்ந்து மோகன கிருஷ்ணன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.மனோகரனை வேறு ஜீப்பில் அழைத்துச் சென்றிருந்தனர் போலீஸார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபு கூறுகையில், மோகனகிருஷ்ணன், தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு தப்ப முயன்றதால் அவனை போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்று கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
எழுதிய  நூல்கள் :
            1.  உடலினை உறுதி செய்
         2. அமெரிக்காவில் 24 நாட்கள்
         3. நீங்களும் ஐ பி எஸ் அதிகாரி ஆகலாம்

விருதுகள் :

          1. கடமையுணர்வுக்கான இந்தியக் குடியரசுத்தலைவரின் விருது,

          2.உயிர் காத்த செயலுக்கு இந்தியப் பிரதமரின் விருது,

          3.வீரதீர செயலுக்கான தமிழக முதல்வரின் விருது ,

          4.கடமை உணர்வுக்கான தமிழக முதல்வரின் விருது,

         5.சிறப்பு அதிரடிப்படையில் வீரதீர செயலுக்கான தமிழக அரசின்                 விருது,

          6.சிறப்பு பணிக்கான இந்தியக் குடியரசு தலைவரின் விருது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H