காஞ்சிபுரம்
மாவட்டத்தில் சென்னையினை அடுத்து உள்ளது குன்றத்தூர். இங்குள்ள அரசு
தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எப்போதுமே பெற்றோர்கள் கூட்டம்
வரிசையில் காத்திருக்கும். தனியார் பள்ளிகளையே மிஞ்சி நிற்குது இந்த அரசு
பள்ளி. கடந்த ஆண்டு வரை 700 மாணவர்கள் படித்து வந்த நிலையில் இந்த ஆண்டு
அது மேலும் அதிகரித்து மாணவர் சேர்க்கை ஆரம்பித்து ஒரு வாரத்திலேயே ஆயிரம்
மாணவர்களை சேர்த்து குன்றத்தூர் அரசு பள்ளி சாதனை செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிக மாணவர்களை கொண்ட தொடக்கப்பள்ளி என்ற
சிறப்பையும் பெற்றுள்ளது.