கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழல் இருப்பதால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி,
* 1 முதல் இரண்டாம் வகுப்புக்கு - 50% பாடங்கள் குறைப்பு.
* 3 முதல் 4 ஆம் வகுப்பு வரை - 49% பாடங்கள் குறைப்பு.
* 5 ஆம் வகுப்புக்கு - 48% பாடங்கள் குறைப்பு.
* 6 ஆம் வகுப்புக்கு - 47 % வரையிலான பாடங்கள் குறைப்பு
* 7,8-ம் வகுப்பு வரை 40% - 50% பாடங்கள் குறைப்பு.
* 9-ம் வகுப்புக்கு 38% பாடங்கள் குறைப்பு.
* 10-ம் வகுப்புக்கு 39% பாடங்கள் குறைப்பு.
* 11, 12-ம் வகுப்புகளுக்கு 35% - 40% பாடங்கள் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reduced syllabus 2021 - 22 education year Go - download here... ( pdf)