நாம்
அனைவருமே ஒரு முறையாவது ரயிலில் பயணித்திருப்போம்.. அப்படி பயணிக்கும்
போது ரயில் தண்டவாளத்தில் ஜல்லி கற்கள் போடப் பட்டிருப்பதை
பார்த்திருப்போம்..
ஆனால்
ஏன் ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுகின்றன என்று நீங்கள் எப்போதாவது
யோசித்தது உண்டா..? உங்கள் மனதிலும் இது போன்ற கேள்வி எழுந்திருந்தால்
அதற்கான பதிலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
ரயில் பாதை பார்ப்பதற்கு எவ்வளவு சாதாரணமானதாக இருக்கிறது.. ஆனால் உண்மையில் அது அவ்வளவு எளிதானது அல்ல
அறிவியல்
மற்றும் சிறப்பு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரயில் தண்டவாளம்
அமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தின் கீழ், கான்கிரீட்டால் ஆன தட்டுகள்
போடப்பட்டுள்ளன, அவை ஸ்லீப்பர்கள் (sleepers) என்று அழைக்கப்படுகின்றன. அதே
நேரத்தில், இந்த கான்கிரீட் தகடுகளின் கீழ் ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளன.
கூடுதலாக, இரண்டு வெவ்வேறு வகையான மண் அதற்கு கீழே போடப்படுகிறது..
இந்திய
ரயில்களின் எடை 10 லட்சம் கிலோ வரை இருக்கும் என்று சொன்னால் உங்களால்
நம்ப முடிகிறதா..? ஆனால் இது உண்மை தான்.. எனவே, அவற்றின் சுமையை தடங்களால்
மட்டும் தாங்க முடியாது. இரும்பு தண்டவாளங்கள், கான்கிரீட் தகடுகள்
மற்றும் கற்கள் ஆகியவை தண்டவாளத்தின் இந்த சுமையை கையாள உதவுகின்றன.
மேலும்
ரயில் அதிவேகத்தில் செல்லும்போது, தண்டவாளத்தில் அதிர்வு உருவாகிறது.
இதனால் தண்டவாளம் விலகவும் வாய்ப்புள்ளது.. எனவே, அதிர்வைக் குறைக்கவும்,
ரயில் பாதையில் கற்கள் போடப்படுகின்றன. பொதுவாக வெப்பம், நில அதிர்வு,
கடினமான வானிலையின் போது தண்டவாளம் சுருங்கவோ அல்லது விரிவடையவும்
செய்யும்.. இதனால் ரயில் கவிழும் ஆபத்து உள்ளது.. இதை தடுப்பதற்கும்
தண்டவாளங்களில் கற்கள் உள்ளன..
ரயில்
தண்டவாளங்களில் தண்ணீர் தேங்குவதை குறைக்கவும் கற்கள் போடப் படுகின்றன..
மேலும் தண்டவாளங்களின் கீழே உள்ள ஸ்லீப்பர் கட்டைகள் அல்லது கான்க்ரீட்
கட்டமைப்பு நகராமல் இருக்க ஜல்லி கற்கள் தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும்
போடப்படுகிறது. ரயில்வேயிடம் இந்த ஜல்லி கற்களை தண்டவாளத்தின் இரு
பக்கங்களிலும் கொட்டுவதற்கு என்றே சிறப்பு வசதிகள் கொண்ட சரக்கு வண்டிகள்
உள்ளன. இவை நேராக அந்த தண்டவாளங்கள் மீது மெதுவாக நகரும். அப்போது ஒரு
பணியாளர் பக்கவாட்டில் இருக்கும் ஒரு லீவரை திறக்க ஜல்லி கற்கள்
தண்டவாளத்தின் உள்பக்கம், வெளிப்பக்கம் சரியாக விழும். பிறகு கற்கள் ஆட்கள்
மூலம் சமப்படுத்தப்படும்.