அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருமான வரி நேரடியாக ஊதியம் வழங்கும் அலுவலரின் TAN எண்ணில் வரவாகும். இதனை உரிய ஆசிரியர்களின் PAN எண்ணின்கீழ் பிரித்து Form No. 24G-ன் வழி வருமானவரித் துறையிடம் காலாண்டிற்கு ஒருமுறை Form 26AS-படி கட்ட வேண்டும். இதற்கு TDS - TAX DEDUCTED AT SOURCE என்று பெயர்.
🛡 நிதியாண்டின் இறுதியில் மேற்படி TDS பணி நிறைவுற்று FORM-16 வருமானவரித் துறையிடமிருந்து பெற்று அவற்றை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இப்பணி முழுக்க முழுக்க ஊதியம் வழங்கும் அலுவலரின் (Disbursing Officer) பொறுப்புகளுள் ஒன்று.
🛡 தமிழ்நாட்டுக் கல்வித்துறையில் 99% ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படும் வருமான வரிக்கான TDS பணியை தணிக்கையாளரிடம் (Auditor) சென்றுதான் முடிக்க வேண்டுமெனக் கூறி ரூ.50 முதல் ரூ.300 வரை ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியே வசூலிக்கப்படுகிறது.
🛡 இது குறித்த தெளிவுரைக்காக தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வருமான வரித்துறையை அணுகியபோது, 'உண்மையில் இப்பணியை வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளரே மேற்கொள்ள இயலுமெனவும், அதற்காக 60 நிமிடப் பயிற்சியே போதுமெனவும், தணிக்கையாளரிடம் சென்று பணம் செலவழிக்கத் தேவையில்லை' எனவும் தெரிவிக்கப்பட்டது.
🛡 இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாட்டக்கிளை சார்பாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
🛡 அம்மனுவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக்கல்வி அலுவலகங்களிலும் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரியை முறையாகத் தாக்கல் (TDS) செய்து FORM-16 PART A & PART B வழங்கவேண்டிய ஊதியம் பெற்றுவழங்கும் அலுவலரின் கடமையை நிறைவேற்ற, முறையற்ற வகையில் ஒவ்வொரு ஆசிரியரிடமும் ரூ.200 முதல் ரூ.300 வரைவசூல் செய்து பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று வருவதாகவும், திருநெல்வேலி மண்டல வருமானவரித் துறை அலுவலகத்தில் ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்தும் தலா ஒரு கணினி இயக்கத் தெரிந்த இளநிலை உதவியாளர் துறைத்தலைவர் அனுமதியுடன் நேரில் வரும்பட்சத்தில் TDS செய்து FORM-16 PART A & PART B வழங்கும் பயிற்சியை 1 மணிநேரத்தில் அளிப்பதாகவும், இதற்கென தணிக்கையாளர்களைத் தேடிச்செல்லவே தேவையில்லை எனவும் தெரிவிப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
🛡 இக்கோரிக்கையை ஏற்ற தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், TDS பணியை வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களைக் கொண்டுதான் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
🛡 TDS தொடர்பாக ஊதியம் வழங்கும் அலுவலருக்கான பொறுப்பே மறக்கடிக்கச் செய்யப்பட்டுள்ள இக்காலகட்டத்தில், உரிய இயக்க நடவடிக்கைகளின் வழி ஆசிரியர்களுக்கான உரிமையை பணவிரயமின்றி பெற்றுத் தந்துள்ள TNPTF தூத்துக்குடி மாவட்டக் கிளையின் நடவடிக்கையை மற்ற மாவட்டங்களிலும் மற்ற துறைகளிலும் மேற்கொண்டால் வருமானவரி செலுத்தியதற்கான சான்று பெறுவது ஊழியர்களுக்குச் சுமையாக இருக்காது.