எனவே , பயிற்சி நன்முறையில் நடைபெறுவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் மாவட்டங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது . இரண்டாம் கட்ட பயிற்சி 76804 ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதால் கூடுதல் கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே மாவட்ட வாரியாக தேவைப்படும் கருத்தாளர் எண்ணிக்கை இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது , கூடுதல் கருத்தாளர்களை தற்பொழுது பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்பட கருத்தாளர்கள் EMIS ல் 19,8,21 க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதில் தற்பொழுது பயிற்சி வழங்கிவரும் கருத்தாளர்களும் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரமும் இணைப்பு 2 - ல் கொடுக்கப்பட்டுள்ளது . முதற்கட்ட பயிற்சி நடைபெறாத கரூர் , தூத்துக்குடி மற்றும் திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தற்பொழுது பயிற்சி நடைபெறவுள்ளது. இரு கருத்தாளர்கள் இணைந்து ஒரு குழுவாகும். ஒவ்வொரு கருத்தாளர் குழுக்களும் தற்பொழுது 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். மேல்நிலைப் பள்ளியில் 20 ) கணினி இணைப்புகளும் ( ( Thin Clients ) உயர்நிலைப்பள்ளிகளில் 10 கணினி இணைப்புகளும் உள்ளன , எனவே ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியில் 18 ஆசிரியர்களும் உயர்நிலைப்பள்ளிகளில் 8 ஆசிரியர்களும் பங்கு கொள்ளத்தக்க வகையில் பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.
Letter to district for II batch training from 23rd to 28th.pdf - Download here...