சனி பகவான் மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் பயணம் செய்யப்போகிறார்.
சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் காலத்தில் சில ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை தரப்போகிறார். சிலரது வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் ஏற்படப்போகிறது. நிகழப்போகும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17 முதல் 2025 ஏப்ரல் வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் விதியை நிர்ணயம் செய்வார் சனிபகவானுக்கு மகரம், கும்பம் ஆட்சி வீடு, துலாம் உச்ச வீடு, மேஷ ராசி நீச்ச வீடு.
சனி பகவான் நீதிமான் என்பதால் சரியான பலன்களை சரியான நேரத்தில் தேடித்தருவார். சனிபகவானைப் பார்த்து பயப்பட வேண்டாம். அவர் தனது ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். எனவே அதிக அளவில் யாருக்கும் கெடுதலை செய்ய மாட்டார். நல்லவர்களுக்கு நல்லதே செய்வார் சனிபகவான்.
எதிர்பாராத சம்பவங்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி என்பதால் எதிர்பாராத பண வரவைத் தரப்போகிறார். தொழில் முதலீடுகளில் லாபம் தேடி வரப்போகிறது. நீங்கள் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பலத்தை தரப்போகிறது. 6ஆவது வீட்டில் அமரப்போகும் சனியால் பிள்ளைகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கைகள் நிறைவேறும். திடீர் திருப்புமுனைகள் ஏற்படப்போகிறது.
வாழ்க்கையில் மாற்றம்
தனுசு ராசிக்கு மூன்றாவது வீட்டில் மறைவதால் மிகப்பெரிய வெற்றியும் பலமும் கிடைக்கப் போகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படப்போகிறது. மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கப் போகிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு நிறைய சவால்களை சந்தித்து இருப்பீர்கள். மிகப்பெரிய மனஉளைச்சல்களை அனுபவித்தீர்கள். பாக்ய சனி மிகப்பெரிய மாற்றத்தையும் திருப்புமுனையையும் தரப்போகிறார். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
ஜென்மசனி மாற்றம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் ஜென்ம சனி விலகுகிறது. இனி பாத சனி என்பதால் தொல்லைகள் நீங்கப்போகிறது. உடல் மன ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமும் மன நிம்மதியும் உண்டாகும். பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பலம் ஏற்படப்போகிறது.
சனி பார்வையால் மாற்றம்
கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் சனிபகவான் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்கள் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம், மன நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். அதிக நேரம் கண் விழித்து வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனமாக இருப்பது அவசியம். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாகும், சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாகவும் பயணம் செய்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கும் நிதானமாக செயல்படுவது அவசியம்.
சனிபகவான் பயணம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனிபகவான் நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாக பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சனிபகவான் இடப்பெயர்ச்சியைப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள். உங்கள் தசாபுத்தி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து பலன்கள் சிறிதளவு மாறுபடலாம். சனிபகவானின் சஞ்சாரம், பார்வையால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகம் கிடைக்கப்போகிறது என்று தனித்தனியாக வரும் நாட்களில் பார்க்கலாம்.