வட்டாட்சியர் அலுவலக வாக்காளர் பணி சிறப்பாக நடக்கிறது..,
ஆசிரியர்களால்!
தேர்தல் துறையின், தேர்தல் பணி, வெகுசிறப்பாக நடக்கிறது..,
ஆசிரியர்களால்!
மாநில & மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நன்றாக நடை பெறுகின்றது.,
ஆசிரியர்களால்!
வருவாய் துறையில், மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க செய்வது...
ஆசிரியர்களால்!
வங்கி கணக்கு, மாணவர்களுக்கு துவங்கி தருவது...
ஆசிரியர்களால்!
மருத்துவ துறையில் வேலைப்பார்க்கும் செவிலியர் போல்,
அவர்கள் உடல் நலம், உயரம், இடை, நோய் அறிந்து, App- ல் பதிவேற்றம் செய்து, மருத்துவ துறைக்கு கிடைக்கப் பெறவைப்பது...
ஆசிரியர்களால்!
கல்வித்துறையின் EMIS பணி, SCHOLARSHIP பணி, MARK SHEET பணி, EMPLOYMENT பதிவு பணி, DATA பணி... மிகநன்றாக நடக்க வைப்பது...
ஆசிரியர்களால்!
கல்விப் பணியே தலையாய பணி, என்ற கொள்கையோடு, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசையோ தொய்வடைந்து போனது...
இதனால், அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி தரம் தாழ்ந்துவிடும் நிலையில் உள்ளது...
(அப்ப, கல்வி தரம் மேம்படுத்த, நாங்கள் ஆசிரியர்களை கண்காணிக்க வருகின்றோம்... கல்வி தரம் உயரும்!)
மேலே கூறிய வேலைகள் எங்கள் புறப் பணிகளே...
அகப் பணிகள் இதோ...
போதை பழக்கத்தை ஒழிக்க அரசு என்ன செய்கிறதோ, செய்யவில்லையோ, மிக அருகில் இருந்து, பள்ளி மாணவர்களை நேரடி தொடர்பிலிருந்து அவர்களை கண்டிக்கும், திருத்தும் பணிகளை செய்வது... ஆசிரியர்களே!
(அதற்கு பரிசு சஸ்பென்ட்/ட்ரான்ஸ்பர்)
# மாணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால், முதலுதவி தந்து, மருத்துவமனை கூட்டி செல்வது...
ஆசிரியர்களே!
பணத்தை தேடி , உழைக்க சென்றுவிடும் பெற்றோர்கள் கவனிக்க இயலாத/தவறிய லட்சணமான மாணவர்கள்.., ஒழுக்கம் குறைந்து விடும் போது, பெற்றோர் தரத் தவறிய கண்டிப்பை தருவது...
ஆசிரியர்களே!
# ஒரு நாள் பள்ளி வராமல் தவறும் மாணவரகள் மற்றும், இடைநிற்க நினைக்கும் மாணவர்களைகூட, தொலைபேசியில் தொடர்ந்து, தொடர்பு கொள்ளுதல்...
# கற்றல் - கற்பித்தல் பணிக்குத் தேவையான பல பொருட்களை கொடுத்து, எந்த கணக்கும் இல்லாமல் உதவிகள் புரிவதும்...
ஆசிரியர்களே!
பாட புத்தகம் கையில் இருக்க, வார்த்தையோடு வார்த்தையாய், மேற்படிப்பின் வழிகாட்டுதல்களை, இறுதிவரை வாழ்க்கைக்கு தேவையான வார்த்தைகளை, நெறிமுறைகளை புகட்டுவது, கண்ணுக்கு தெரியாது,
மனதால் உணரவைக்கும் பணி....
ஆசிரியர்களால் மட்டுமே சாத்தியம்
மாணவர்களின் மன அழுத்தத்தையும், பெற்றோர்கள் கண்ணீரையும், தினம், தினம், பார்த்து, குடும்ப பிரச்சனைகள் தீர்ப்பதும்.... ஆசிரியர்கள் தான்!
மேற்கூறிய அகப் பணிகளுக்கு,
எந்த G.O வும் கிடையாது...
ஆசிரியப் பணியை எந்த App-லும் அடக்கிவிட முடியாது..அளவிட முடியாது
ஆசிரியர் என்பவருக்கு பள்ளியில் இருந்து வெளியேறும் மாணவனை ஒரு மனிதனாய் உருவாக்க.
நோட்டு, புத்தகம், எழுத்து, சொல், ஒழுக்கம், விளையாட்டு, பாடம், தேர்வு, மதிப்பெண், கலை, நடனம், பாட்டு, பண்பு, ஓவியம், சேவை, மனித நேயம்,
இவை மட்டும் போதும்
கல்வியை செயல்படுத்த இது 👆🏽மட்டும் போதும்..
கல்வித்துறையின் Online services- ல் இருந்து எங்களை விடுவியுங்கள்... தனி துறை வைத்து மேம்படித்தினால் சிறப்பு...
தயவு செய்து எந்த துறையும் உள்நுழையாதீர்.... ஆம். சட்டம் சொல்கிறது தான். எங்களுக்காக குரல் கொடுங்கள்., சட்டத்தை மாற்றுங்கள், ...
டெல்லி, பஞ்சாப், போல்....
(சிரிப்பிற்கு மட்டும்: மற்ற துறைகளை கல்வி கற்பிக்க நாங்கள் பள்ளிக்கு வரசொல்வதில்லையே..!)
சொன்னது கொஞ்சம்
"சொல்லப் படாத வேதனைகள் இன்னும் பல உண்டு...
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆசிரியர் பணிகள்... ஒவ்வொரு ஆசிரியரும் படித்து சிந்திக்க வேண்டிய பதிவு இது :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |