உங்கள் வீட்டில் எலிகள் இருக்கிறதா? அதை எப்படி விரட்டலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறீர்களா?
இரண்டு பொருள் தான்! எப்பேர்ப்பட்ட எலியாக இருந்தாலும் உங்கள் வீட்டு பக்கம் கால் அடி கூட எடுத்து வைக்காது.
தேவையான பொருட்கள்:
1.தூள் புகையிலை - 1 பாக்கெட்
2. வெறும் மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன் (அதிக காரம் உள்ளது)
செய்முறை:
தூள் புகையிலை என்று கடைகளில் விற்கும். அது வெறும் 10 ரூபாய் மட்டும்தான் இருக்கும்.கடையில் தூள் புகையிலை என்று வாங்கிக் கொள்ளுங்கள்.
1.ஒரு Bowl எடுத்து அதில் சிறிது தூள் புகையிலை எடுத்துக் கொள்ளவும்.
2. காரம் அதிகமுள்ள வெறும் மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது
இந்த கலவையினை எங்கேங்கே வீட்டில் எலி வருகிறதோ அந்த இடத்தில் லேசாக தூவி
விடுங்கள். வீட்டின் சமையல் அறை, குடோன், கார் உட்பகுதியில் என லேசாக தூவி
விடுங்கள்.
எலிக்கு புகையிலையின் வாசம் பிடிக்காது அதுபோல அதிக காரம்
அதற்கு ஆகாது.எனவே ஒரு முறை வந்து பார்த்து விட்டால் அந்த வாசனையை வைத்தே
அது வீட்டு பக்கம் வராது.
செடிகள் வைத்திருந்தால் செடிகளுக்கு மேல் தூவாமல் கீழ்பகுதியில் தூவி விடுங்கள்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால். இரவில் தூவி விட்டு காலையில் சீக்கிரமாக எழுந்து அதனை சுத்தம் செய்து விடுங்கள்.
இது முழுக்க முழுக்க முயற்சி செய்து பார்த்த ஒரு முறையாகும்.கண்டிப்பாக செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...