குறிப்பாக ரூபாய் 3 லட்சம் வரை விவசாயிகளுக்கு கடன்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு லட்சத்திற்கு மேலாக கடன்களைப் பெறுவோருக்கு நிலப்பத்திரம் போன்றவற்றை வங்கியில் சமர்ப்பிக்கவேண்டும். இதன் மூலம் பெறப்படும் கடன்களுக்கு 7 சதவீத வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சரியான நேரத்தில் கடனை செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி சலுகை வழங்கப்படுவதால் 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்த நேரிடும்.
யாரெல்லாம் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.?
சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர், குத்தகை விவசாயிகள்,சுய உதவிக்குழுவினர் அனைவரும் கிசான் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 வயது முதல் 75 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். கிசான் கார்டை நபார்ட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி , பஞ்சாப் நேஷனல் வங்கி , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி , பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ ஆகிய வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலன் பெறும் வகையில் வழங்குகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்பட ஆதாரங்கள், நில ஆவணங்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முழுமையாக நிரப்பப்பட்ட KCC விண்ணப்ப படிவம், வங்கிகள் கேட்கும் பிற ஆவணங்களை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் எந்த வங்கிகளில் நீங்கள் கிசான் கிரெட் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ? அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திற்கு செல்லவேண்டும்.
பின்னர் kissan credit card க்கு விண்ணப்பிக்கவும் என்பதை கிளிக் செய்து, கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்துக் கொண்டு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தொடர்ந்து கடன் அதிகாரி உங்களது படிவத்தை மதிப்பாய்வு செய்த பிறகு கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.









