தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல் வழங்கவும், அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், கரூரில் இன்று கல்வித்துறை ஊழியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பணிமாறுதல் கலந்தாய்வுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை ஆணையத்தால் வெளியிடப்படாததால், கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை என்பதை வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை ஊழியர்கள் சுமார் 100 பேர் கண்டன முழக்கத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஏற்கனவே பணியில் உள்ள முதுநிலை ஊழியர்கள் பலரது பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...