அக்டோபர்
1 ஆம் தேதி, இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் பணம்
செலுத்துவது தொடர்பான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விதிகள் மாற
உள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங் அல்லது வணிகத் தளங்களில் வாடிக்கையாளர்களின் கிரெடிட்
மற்றும் டெபிட் கார்டு சம்பந்தப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படுவது பல்வேறு
இணையதள மோசடிகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே அனைத்து வங்கி கிரெடிட்
மற்றும் டெபிட் கார்டின் சிவிவி எண், காலவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை
எந்தவொரு வணிக நிறுவனமோ, பணப்பறிமாற்ற ஆப்களோ, ஆன்லைன் விற்பனை ஸ்டோர்கள்
அல்லது இ-காமர்ஸ் நிறுவனங்கள் சேமித்து வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்ய
உள்ளது.
இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது, உள்நாட்டு ஆன்லைன் கொள்முதல்களுக்கு ஏற்ற வகையில் கார்டு-ஆன்-ஃபைல் (CoF) டோக்கனைசேஷனைப் பின்பற்றுவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடைமுறையை ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொழில்நுட்ப மாற்றங்களை செய்ய கால அவகாசம் கோரியதால் தற்போது அக்டோபர் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
டோக்கனைசேஷன் என்றால் என்ன?
வணிக நிறுவனங்கள், ஃபின்டெக் ஆப், ஆன்லைன் வணிக தளங்கள், வங்கிகள் பணப்பரிவர்த்தனை செய்யும் போதும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டிற்கான தனிப்பட்ட குறியீடு ஒதுக்கப்படும், இது 'டோக்கன்' என அழைக்கப்படுகிறது. இந்த டோக்கன் நீங்கள் இணையதளம், ஆப் அல்லது ஆன்லைன் ஸ்டோர்களில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொருமுறையும் உருவாக்கப்படும். இது வங்கிகள், கிரெடிட் கார்டுகள், பேமென்ட் தளங்கள், மூன்றாம் தரப்பு மெர்ச்சண்ட்கள் ஆகிய அனைத்திற்கும் பொருந்தும்.!
ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் "டோக்கனைசேஷன் என்பது உண்மையான கார்டு விவரங்களை "டோக்கன்" எனப்படும் மாற்றுக் குறியீட்டைக் கொண்டு மாற்றுவதைக் குறிக்கிறது. ஒவ்வொரு டோக்கனும் கார்டு, டோக்கன் கோரிக்கையாளர் மற்றும் கோரிக்கை செய்யப்பட்ட சாதனத்தின் தனித்துவமான கலவையாகும்" என குறிப்பிட்டுள்ளது.
உங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டை டோக்கனைஸ் செய்வது எப்படி?
ஸ்டெப்1: உணவு, மளிகை சாமான்கள் அல்லது உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க உங்களுக்கு பிடித்த அல்லது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆன்லைன் இணையதளம் அல்லது மொபைல் ஆப்பிற்கு சென்று பரிவர்த்தனையை தொடங்கவும்.
ஸ்டெப்2: செக்அவுட் பக்கத்திற்கு செல்லும் போது, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது CVV விவரங்களை வழங்கவும்.
ஸ்டெப் 3: "உங்கள் கார்டைப் பாதுகாக்கவும்" (Secure your card) அல்லது "ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி கார்டைச் சேமி" (Save card as per RBI guidelines) என்ற இரண்டு விருப்பங்களில் ஒன்றை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: சேவ் (Save) என்பதைக் கிளிக் செய்துவிட்டு, உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்துள்ள OTP ஐ டைப் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இப்போது வெற்றிகரமாக டோக்கனைஸ் செய்யப்பட்டு பாதுகாக்கப்பானதாக மாறிவிடும்.
இதன் மூலமாக நீங்கள் இனி அமேசான், பிளிப்கார்ட், Paytm மற்றும் Myntra போன்ற ஆன்லைன் தளங்களில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைக் கொண்டு பொருட்களை வாங்கினாலும், அவற்றால் இனி உங்கள் கார்டு விவரங்களைச் சேமிக்க முடியாது.