JACTTO GEO - ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


JACTTO GEO - ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்?

 

Untitled1_001


ஆசிரியருக்கு வணக்கம்..

 *ஏன் இன்று மாநாட்டிற்கு வர வேண்டும்?*

ஒவ்வொரு சங்கமும்

👉🏼 மாலை நேர ஆர்ப்பாட்டம்

👉🏼 கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

👉🏼 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

👉🏼ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 

👉🏼தற்செயல் விடுப்பு போராட்டம்

👉🏼உண்ணாவிரதம் 

👉🏼மனித சங்கிலி போராட்டம்

👉🏼 காத்திருப்பு போராட்டம்

*இறுதியாக*

🤲🏼வேலை நிறுத்தம் 


என பல போராட்டங்களை சந்தித்து *இறுதியில் சந்திப்பது முதலமைச்சரின் நம்பிக்கையான வாக்குறுதிகளை தான்* அவ்வாக்குறுதிகளின் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வரும். இதுபோல கடந்த 18 ஆண்டுகளாக போராட்டங்கள் தொடர்கின்றன. 


ஆனால் இயக்க வரலாற்றில் போராட்ட வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு *இவை எல்லாம் செய்வதற்கு முன்னே முதலமைச்சர் நம்மோடு பேச வருகிறார்* 


பேச்சுவார்த்தையில்  10 சங்கப் பிரதிநிதிகளுக்கு முன்னால் தரும் வாக்குறுதிகளை *பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் முன்னே தர வருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.*


மாநாட்டில் கலந்துகொள்ளும் நம்மை கண்டு *இத்தனை ஊழியர்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டால் மட்டுமே நேர்மறையான சில வார்த்தைகளை அவர் சொல்ல நேரிடும்*. எனவே *களப்போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நாளை நடக்கும் மாநாட்டில் ஒரு அரசு ஊழியராக ஆசிரியராக கட்டாயம் கலந்து கொண்டு இதுவரை ஆற்றாத களப்பணியை நாளைக்கு ஆற்ற* மாநாட்டிற்கு வர வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.


<சமூகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும்  *நன்மதிப்பு இருப்பது நாம் செய்யும் பணியால் மட்டுமே* இந்த பணிக்கு ஒரு பாதிப்பு என்றால் யாரோ சிலர் போராட மாட்டார்கள் *உங்கள் பணி உங்கள் வாழ்க்கை உங்கள் பெருமை உங்கள் நம்பிக்கைக்கு நீங்கள் தான் களத்திற்கு நேரடியாக வரவேண்டும்* உங்கள் கௌரவத்தை உங்கள் வாழ்க்கையை  காத்துக் கொள்ள நம்பிக்கையோடு மாநாட்டிற்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.


உறவினர் திருமணங்களுக்கு ஆயிரம் கி.மீ செல்லும் நாம், உணர்வான நம் பணிக்கான கோரிக்கை போராட்டத்திற்கு சில கிலோமீட்டர் செல்வது பெரிதல்ல.

*இது உங்கள் வாழ்க்கைக்கானது உங்களுக்கானது யாரையும் எதிர்பார்க்காமல் துணிந்து எழுந்து வாருங்கள்.*


*மாநாட்டில் எல்லாம் மாறிவிடும் என்று சொல்லவில்லை*


 ஆனால் 


*நீண்ட பயணம் முதல் அடியில் இருந்து தான் தொடங்கும்* என்ற பொன்மொழிகள் மீது நம்பிக்கை கொண்டு வாருங்கள்.. 

*10/9/22   சனிக்கிழமை  சென்னை   தீவுத்திடலில்   நடைபெறும்   வாழ்வாதார   நம்பிக்கை   மாநாட்டில்   நமது   கடமைகள்.*

💥💥💥💥💥💥💥


👉*கடமையை   செய்வோம்   உரிமையை   கோருவோம் என்பது   நமது   அனைவரின்   தாரக    மந்திரம்.*


👉மாநாட்டில்   முதல்வர்   என்ன வேண்டுமானாலும்    சொல்லட்டும்.   நாம்   செய்ய   வேண்டியதை   சரியாக   செய்வோம்.


👉கண்ணுக்கு   முன்   இருக்கும்   நமது  ஊழியர்களை/ ஆசிரியர்களை   திரட்டுவது  நமக்கு    கடினம்   என்றால்,  கண்ணுக்கு   தெரியாத   பொருளாதார   கோரிக்கைகளை   நிறைவேற்ற   ஆட்சியாளர்கள்   யோசிப்பார்கள்   இல்லையா?    அவர்களை   யோசிக்க   விடாமல்,


👉தன்னெழுச்சியாக      அனைவரும்   ஏதோ   ஒரு  வழியில்   மாநாட்டிற்கு   சென்று   அடைவது   என  முடிவு   எடுப்போம்.


👉நாம்   ஒருவர்   செல்லவில்லை யென்றால்   என்ன    என்று   பின்வாங்காதீர்கள்.   ஒவ்வொருவரும்   சேர்ந்தால்தான்   கூட்டம்.


👉நமது   உழைப்பில்   வாழ்ந்து   கொண்டு   இருக்கின்ற   சில   வீணர்களின்   வீண்பேச்சை   கேட்டு   மாநாட்டிற்கு   வராமல்   இருந்து விடாதீர்கள்.  அந்த   வீணர்களையும்    அழைத்து வர   முயற்சி   செய்யுங்கள்.

*இம்மாநாடு கோரிக்கைகள் வென்றெடுக்கும் முதல் படியாக இருக்கலாம்*

🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️

நல்லதே நடக்கும்

நம்பிக்கையோடு செல்வோம்


வாருங்கள் ஒன்றிணைந்து செல்வோம்.. 

(தவிர்க்கக் காரணம் தேடாதீர்)

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H