எதிர்கால
நலனுக்காக சிறுக, சிறுக சேமிக்கும் பணம்தான் பெரிய அளவில் பலன்
கொடுக்கும். நாம் கஷ்டப்பட்டு உழைத்து சேமித்த பணத்தை சொத்து, தங்கம்
மற்றும் வங்கி, நிதி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வைக்கிறோம்.
நம்முடைய ஓய்வு காலத்தில் அவை தான் பணப் பாதுகாப்பு கொடுக்கும் அமுதசுரபியாக அமைகின்றன.
அதிக லாபம் என்பதைக் காட்டிலும், உத்தரவாதம் அளிக்கப்பட்ட வருமானம் மற்றும் முதலீட்டிற்கு பாதுகாப்பு தரும் முதலீடுகளையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையில் எல்ஐசி மக்களின் பிரதான தேர்வாக அமைகிறது. எல்ஐசி வழங்கும் சிறப்பு மிகுந்த பாலிசிகளில் ஜீவன் உமாங் பாலிசியும் ஒன்றாகும்.
மற்ற பாலிசிகளில் இருந்து ஜீவன் உமாங் பெருமளவில் வேறுபடுகிறது. இங்கு பாலிசிதாரருக்கு வாழ்நாள் காப்பீடு வழங்கப்படுவதுடன், ஏற்கனவே வரையறுக்கப்பட்ட காலம் வரையிலும் நீங்கள் பணம் சேமிப்பதற்கான வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. பாலிசி காலம் வரையிலும் பாலிசிதாரர் வாழும் பட்சத்தில் மிகப் பெரிய தொகை அவர்களுக்கு செட்டில்மண்ட் செய்யப்படுகிறது.
ஜீவன் உமாங் பாலிசியிலேயே எண்டோவ்மெண்ட் திட்டத்திற்கான பலனும் உள்ளடங்குகிறது. பாலிசி காலம் முடிவடைவதற்குள் பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில், அவர்களது வாரிசுதாரர்களுக்கு உத்தரவாதம் கொண்ட அனைத்துப் பணமும் சென்று சேருகிறது. 90 நாட்கள் முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியின் கீழ் பலன் அடையலாம்.
ஜீவன் உமாங் பாலிசியில் உங்களுக்கு 100 வயது வரையிலும் காப்பீடு அளிக்கப்படுகிறது. உங்கள் ப்ரீமியம் காலம் முடிவடைந்த பிறகு, அதில் இருந்து 100ஆவது வயது வரையிலும் ஆண்டுதோறும் நீங்கள் வட்டிப் பணம் பெற்றுக் கொள்ள முடியும்.
மொத்த திட்ட முதலீட்டு மதிப்பில், 8 சதவீதம் அளவுக்கான பணப் பலன் உங்களுக்கு கிடைக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு இப்போது 26 வயது ஆகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ரூ.4.5 லட்சத்திற்கு காப்பீடு தேர்வு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் 30 ஆண்டுகளுக்கு ப்ரீமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் வயதுக்கு ஏற்ப ப்ரீமியம் தொகை மற்றும் காலம் வேறுபடும்.
குறிப்பிட்ட கால வரம்புக்கு முன்னதாகவே அனைத்து ப்ரீமியம் தொகையையும் நீங்கள் செலுத்தி விட்டீர்கள் என்றால், உங்களுக்கு 31ஆவது ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 8 சதவீதப் பணம் வட்டியாக கிடைக்கும். அதாவது ரூ.36,000 பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுதோறும் வட்டி பணம் பெற விரும்பாதவர்கள் பாலிசி ப்ரீமியம் காலம் முடிவடைந்ததும் பெரும் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் பெரும் தொகை பெறவில்லை என்றால் 100 ஆண்டுகள் வரையில் உங்களுக்கான பணப்பலன் வந்து கொண்டே இருக்கும்.