கன்னியாகுமரி
மாவட்டம் அதங்கோடு தனியார் பள்ளியில் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்து
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு பின் சிறுவனின் உடல்
உறவினர்கள் கைப்பற்றி புத்தகங்களோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் அருகே நுள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர்.
சுனில் சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி
சோபியா என்ற மனைவியும் அஸ்வின் என்ற 11 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குழந்தைகள் இருவரும் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் கடந்த 24 ம் தேதி அஸ்வின் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுவிட்டு திரும்பி வரும்போது அதே பள்ளி சீருடையில் வந்த மாணவன் ஒருவன் கோலா குளிர்பான பாட்டில் ஒன்றை கையில் கொடுத்து குடிக்க கூறியுள்ளார். அஸ்வினும் அதனை நம்பி வாங்கி குடித்துள்ளார்.
அஸ்வின் வழக்கம்போல் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த அஸ்வின் இயல்பாக இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பிறகு 26 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கூடி சென்றுள்ளனர். அடுத்தநாள் அவனது வாய், நாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் அஸ்வினை கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து நடத்திய பரிசோதனையில் சிறுவனின் சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்து இருந்தது தெரியவந்தது.
சிறுவன் ஆசிட் போன்ற ஏதோ ஒன்று குடித்தது தெரியவந்தது. இதனையடுத்து அஸ்வினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அஸ்வின் படித்த பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய முயன்றபோது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இணைப்புகள் அனைத்தும் எலி கடித்து துண்டிக்கப்பட்டு இருந்ததாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுனில் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியது. போலீசார் பள்ளிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் அஸ்வினுக்கு கடந்த 16 ம் தேதி உடல்நிலை மிகவும் மோசமடைந்தது உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து 17 ம் தேதி 3 மணியளவில் அஸ்வின் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து சம்பந்தபட்ட பள்ளிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கபட்டது. அஸ்வினின் பெற்றோர் மகனின் இறப்பிற்கு காரணமான நபர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என்று கூறிவிட்டனர். இதனையடுத்து அஸ்வினின் உடல் நெய்யாற்றின்கரை தனியார் மருத்துவமனையில் இருந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு 18 ம் தேதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யபட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.அதோடு பள்ளிக்கு தமிழக அரசின் அங்கீகாரம் இல்லை என்பதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு நேரடையாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது..
சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அஸ்வினின் வீட்டிற்கு நேரடியாக சென்று பெற்றோரை பார்த்து ஆறுதல் கூறி அவர்களை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து 4 அம்ச கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை அளித்தனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பெற்றோர் அஸ்வினின் உடலை பெற்று நல்லடக்கம் செய்ய முன்வந்தனர். அஸ்வினின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு வீட்டின் பின்புறத்தில் தோண்டப்பட்ட கல்லறையில் அவனது புத்தகங்களுடன் இந்து முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்க நிகழ்வில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட ஊர்மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பதற்றம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.