ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.
THE RED BALLOON |தமிழில் கதை சுருக்கம் 5 நிமிடத்தில்
👇👇👇👇👇👇👇👇
சிறார் திரைப்படம் THE RED BALLOON | 5 நிமிடத்தில் பதிவிறக்கம் செய்ய
👇👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD THE VIDEO
மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று ‘தி ரெட் பலூன்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும்.
இணைப்பு (லிங்க்) மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திரைப்படத்தை மட்டுமே திரையிட வேண்டும். வேறு எந்தப் படத்தையும் மாற்றாகக் காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது