மொத்தமாக 7 அலுவலக உதவியாளர் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 4 இடங்கள் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிட/ அருந்ததியினர் 18 -37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினர் 18-34 வயதுக்குள்ளும், பொதுப் பிரிவினர் 18-32 வாயத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், விண்ணப்பப் படிவத்தை இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும், மார்ச் மாதம் 11ம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி, உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, செங்குந்தர் திருமண மண்டப வளாகம், பென்னாகரம் ரோடு, குமாரசாமிப்பேட்டை, தருமபுரி மாவட்டம் - 635 701 ஆகும்.
விண்ணப்பப் படிவத்துடன், கல்விச் சான்று நகல், சாதி சான்றிதழ் நகல், குடும்ப அடையாள அட்டை நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், முன்னுரிமைக்கான சான்றின் நகல், இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









