பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2025 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2025

திருக்குறள் 

குறள் 344:

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை

மயலாகும் மற்றும் பெயர்த்து.

விளக்க உரை:

உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.

பழமொழி :

Curiosity is the first step to success. 

ஆர்வமே வெற்றிக்கான முதல் படி.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.

2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. கல்வியும் உழைப்பும் போதுமானது - காமராஜர்.

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டில் குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

அழ.வள்ளியப்பா

Azha. valliappa

02.சுதந்திர இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர் யார்?

சி.பி. முத்தம்மா

C. B. Muthamma

English words :

relic – an object, tradition, etc. from the past that still survives today.; காலம் கடந்து வாழும் பழம்பொருள்.

Grammar Tips: 

 Don't say

I prefer coffee than tea 

Say 

I prefer coffee to tea.

prefer is always followed by the preposition 'to'

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

ஆகஸ்ட் 20

இராஜீவ் காந்தி அவைகளின் பிறந்தநாள்

இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

உலகக் கொசு நாள்

உலகக் கொசு நாள் (World Mosquito Day), ஆண்டுதோறும் ஆகத்து 20 ஆம் நாள் பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சர் ரொனால்டு ராஸ் 1897 ஆகத்து 20 ஆம் நாள் பெண் கொசுகள் மூலமாக மலேரியா நோய் மனிதருக்குப் பரவுகிறது என முதன் முதலில் கண்டுபிடித்தார்.[1] இவர் தனது கண்டுபிடிப்பின் பின்னர் இந்நாள் உலக கொசு நாள் என்ற பெயரில் ஆகத்து 20 அன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மத நல்லிணக்க தினம்

சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 பறக்கும் குதிரை

பெர்ஷியாவின் சுல்தான் என்பவர் விந்தையான பொருள்களைக் கண்டால், அதை அடைய விரும்புவார். ஒருநாள் ஓர் இளவரசன் மாயக் குதிரை ஒன்றில் ஏறி அரண்மனை உப்பரிகை மேல் பறந்து கொண்டிருந்தான். இந்த அற்புதமான குதிரையின் விலை என்ன? என்று கேட்டார் சுல்தான். அந்த இளவரசன், இளவரசியைக் கை பிடிப்பது! என்று கூறினான். 

சுல்தானும் ஒத்துக்கொண்டார். ஆனால், என்னுடைய மகன் முதலில் இந்தக் குதிரை மீது அமர்ந்து பறப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்! என்று சுல்தான் கூறினார். 

சுல்தானின் மகன் குதிரை மீது அமர்ந்ததும் அது பறந்து எல்லோருடைய பார்வையிலிருந்தும் மறைந்து விட்டது. சுல்தானின் மகன் திரும்பி வராததால் சுல்தானும், அமைச்சர்களும் கவலை கொண்டனர். அவர்கள் இளவரசனைக் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்தனர். 

சுல்தானின் மகன் காற்றில் பறந்து கொண்டே இருந்தான். அவனால் அந்த மாய குதிரையைக் கட்டுப்படுத்த இயலவில்லை. பல நாட்களுக்கு பிறகு அவன் வந்தான். அரண்மனையில் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர். அவன் திரும்பி வந்ததால் அந்த இளவரசனை விடுவித்தனர். ஆனால், அந்த இளவரசனை அவர்கள் அவமானப்படுத்திவிட்டதால், அவர்களை பழிவாங்க வேண்டும் எனச் சபதமிட்டான். 

சுல்தானின் அரண்மனையில் இளவரசிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இளவரசியைக் குணப்படுத்துபவர்களுக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படும் என்று சுல்தான் கூறினார். இளவரசன் மருத்துவன் போன்று மாறுவேடமணிந்து சுல்தானின் அரண்மனைக்கு சென்றான். 

முதலில் மந்திரக் குதிரையையும், இளவரசியையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! எனக் கூறினான். மந்திரக் குதிரையும், இளவரசியும் வந்த பின்பு தன் மந்திரசக்தியைப் பயன்படுத்தி, இளவரசியைக் குணப்படுத்தி தன்னுடைய மாயக்குதிரை மீது அமர்த்திக் கொண்டு பறந்து சென்றுவிட்டான். யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது சொந்தமான பொருளை அவனே அடைந்து கொண்டான். 

நீதி :

நமது சொந்த பொருளை யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தேவையில்லை.

இன்றைய செய்திகள் - 20.08.2025

⭐கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தடம்: தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு

⭐ராஜஸ்தானைச் சேர்ந்த மாணிகா விஸ்வகர்மா மிஸ் யூனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்றுள்ளார்.

⭐இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள் வழங்க தயார்- சீனா அறிவிப்பு

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

🏀முதல் ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட தென் ஆப்பிரிக்கா- 98 ரன்களில் அபார வெற்றி

🏀ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.

இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.

Today's Headlines

⭐Tamil Nadu Government allocates funds for the Koyambedu - Pattabiram Metro Line project.

⭐Manika Vishwakarma from Rajasthan has won the title of Miss Universe India 2025. 

⭐China has announced it is ready to supply fertilizers and rare earth minerals to India.

 SPORT NEWS

🏀India Women's ODI World Cup squad announced.

🏀First ODI: South Africa sweep Australia won with 98 runs.

🏀The Asian Shooting Championship is underway in Kazakhstan. India's Manu Bhaker won bronze in the 10m air pistol category.

Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H