ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பு
நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19-ந்தேதி
கடைசி நாள்.
வருடந்தோறும் இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலை தேர்வு என்றும், மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 வகை உண்டு. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மெயின் தேர்வை எழுதலாம். மெயின்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம். மெயின்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களை கூட்டி இட ஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரித்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகள் கிடைக்கும்.கடந்த வருடம் அறிவித்த சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் 2015-2016-ம் வருடத்திற்கு 11,29 காலிப்பணியிடங்களுக்கு
அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க
ஜூன் 19-ந்தேதி கடைசிநாள். வருடந்தோறும் இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலை தேர்வு என்றும், மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று 3 வகை உண்டு. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மெயின் தேர்வை எழுதலாம். மெயின்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம். மெயின்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களை கூட்டி இட ஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரித்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகள் கிடைக்கும்.கடந்த வருடம் அறிவித்த சிவில் சர்வீசஸ் தேர்வின் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.
முதல் நிலை தேர்வு ஆகஸ்டு 23-ந்தேதி நடைபெறுகிறது. அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின்தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.