டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் : வரும் 14ஆம் தேதிக்குள் சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Monday, 12 August 2019

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் : வரும் 14ஆம் தேதிக்குள் சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிவளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசின் விருதுக்காக, மாவட்ட அளவிலான பரிந்துரை பட்டியலை, வரும் 14-ம் தேதிக்குள் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்ப வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  இந்த மாத இறுதியில் தகுதியான ஆசிரியர்கள் 350 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.*

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad