34 ஆண்டுகளாக பதவி உயர்வில்லாமல் மன வேதனையில் தவிக்கும் தொழில் ஆசிரியர்கள்:
கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் 1978ல் மேல்நிலை
பள்ளி முறை துவங்கிய போது, பல தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
1986ம் ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழிற்கல்வி
ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி
ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை பதவி
உயர்வு.
இதை, கல்வி துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இவர்களில் வணிகவியல்
ஆசிரியர்களை மட்டும், கடந்த ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மற்ற
ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை.
தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
முதன்மை கல்வி அலுவலகத்தில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணியில்
சேருபவர், தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து, முதுகலை ஆசிரியர் அளவிற்கு
பதவி உயர்வு பெறுகிறார்.30 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து தகுதியுடன் மேல்நிலை வகுப்புகளுக்கு
பாடம் நடத்திய, எங்களுக்கு பதவி உயர்வு இல்லை. போராட்டங்கள் நடத்தியும்
பூஜ்யம் தான், என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...