சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகள்:
உலகின் புகழ்பெற்ற பல்கலைகளில் ஒன்றாக சிங்கப்பூர் தேசிய பல்கலை, தான்
வழங்கும் பல்வேறான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்களை
கேட்டுக் கொள்கிறது.
இந்திய தரநிலையில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது இந்த 2013ம்
ஆண்டில் 12ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதவுள்ளவர்கள் மற்றும் அதற்கு
இணையான சர்வதேச அளவிலான பள்ளிக் கல்வித் தகுதியை வைத்திருப்பவர்கள் www.nus.edu.sg/admissions/undergrad என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தாண்டு இறுதித் தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்கள், சமீபத்தில் நடைபெற்ற தேர்வின் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
IB தகுதியுடையவர்கள், விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி பிப்ரவரி 21.
இந்திய 12ம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கான கடைசித் தேதி மார்ச் 31. பிறவகை
தகுதியுடையவர்களுக்கு பிப்ரவரி 28 கடைசித் தேதி.
அனைத்து வகையான விரிவான விபரங்களுக்கும் www.askadmissions.nus.edu.sg என்ற வலைத்தளம் செல்க.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...