- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 24-03-2013

நுழைவுத் தேர்வு 1-6-2013

விவரங்களுக்கு: www.aiimsexams.org

 நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவக் கல்வி நிறுவனமான தில்லியில் உள்ள எய்ம்ஸ் கல்வி நிறுவனத்திலும் அதுபோல இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்படும் ஆறு எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களிலும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
இந்தக் கல்வி நிறுவனங்களில்  எம்பிபிஎஸ் படிப்பதற்கான கட்டணம்  ரூ.2 ஆயிரத்துக்கும் குறைவு

தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக் கல்வியிலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் தலைசிறந்த மருத்துவக் கல்வி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கனவு. நேருவின் முன் முயற்சியால் அன்றைய மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கௌர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக எய்ம்ஸ் என்று அழைக்கப்படும் ஆல் இந்தியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் 1956-ஆம் ஆண்டில் உருவானது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போபால், புவனேஸ்வரம், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் புதிதாக அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்கப்பட உள்ளன. இந்தப் புதிய கல்வி நிலையங்களில் தலா 100 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுவார்கள். தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் படிப்பில் 72 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதுதவிர, வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு இடம் அளிக்கப்படும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 11 இடங்களும், பழங்குடி இன மாணவர்களுக்கு 5 இடங்களும், ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு 19 இடங்களும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 37 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான இடங்களுக்கு போதிய தகுதி படைத்த மாணவர்கள் கிடைக்காவிட்டால் அந்த இடங்கள் தகுதியுடைய பழங்குடியின மாணவர்களைக் கொண்டும், பழங்குடியின மாணவர்களுக்கான இடங்களில் காலி இடங்கள் இருந்தால் அந்த இடங்கள் தகுதியுடைய தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கொண்டும் நிரப்பப்படும். அந்த இரண்டு பிரிவுகளிலும் தகுதியுடைய மாணவர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்கள் மாற்றுத் திறனாளி மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களைக் கொண்டும், அதிலும் தகுதியான மாணவர்கள் இல்லாவிட்டால் அந்த இடங்கள் பொதுப் பிரிவு மாணவர்களைக் கொண்டும் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தொடங்கப்படும் ஆறு எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீத இடங்களும் பழங்குடியினருக்கு 7.5 சதவீத இடங்களும் ஓபிசி மாணவர்களுக்கு 27 சதவீத இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 3 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

 இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் 17 வயதானவர்களாக (டிசம்பர் 31-ஆம் தேதி அன்று) இருக்க வேண்டும். அதாவது, 1997-ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து, பிளஸ் டூ தேர்வில் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு முன் எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடைசியாக அத்தேர்வை எழுதிய ஆண்டைக் குறிப்பிட வேண்டும். எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் எந்தக் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புகிறோம் என்பதையும் விண்ணப்பத்தில் வரிசைப்படுத்திக் குறிப்பிட வேண்டும்.

இந்த ஆண்டு, நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர பொது மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பொது நுழைவுத் தேர்விலிருந்து எய்ம்ஸ்  கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு கல்வி நிறுவனங்களிலும் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய அளவில் தனி நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் மாதம் முதல் தேதி நடத்தப்படுகிறது.

அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வரம், சண்டீகர், சென்னை, டேராடூன், தில்லி, குவாஹாத்தி, ஹைதராபாத், ஜம்மு, ஜோத்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, பாட்னா, ரெய்ப்பூர் ஆகிய ஊர்களில் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். இந்த நுழைவுத் தேர்வு மூன்றரை மணி நேரம் நடைபெறும். அப்ஜெக்ட்டிவ் முறையில்  கேள்விகள் கேட்கப்படும். இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 60 கேள்விகளும், பொது அறிவுப் பாடத்தில் 20 கேள்விகளும் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் எது சரியானது என்பதைத் தேர்வுசெய்து விடையளிக்க வேண்டும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. பிளஸ் டூ பாடத்திட்ட நிலையில் வினாக்கள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் என எதையும் எய்ம்ஸ் வெளியிடவில்லை. வினாத்தாள்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் இருக்கும். எந்த மொழியில் வினாத்தாள் வேண்டும் என்பதை மாணவர்கள் விண்ணப்பிக்கும்போதே குறிப்பிட வேண்டும்.  விண்ணப்பித்தபின் அதை மாற்ற முடியாது.

இந்த நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களில் பொதுப் பிரிவு மாணவர்கள், அந்தத் தேர்வில் குறைந்தது 50 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். ஓபிசி பிரிவு மாணவர்கள் குறைந்தது 45 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 40 சதவீத கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்று எய்ம்ஸ் நிர்ணயித்துள்ளது. இது புதிதாகத் தொடங்கப்படும் ஆறு எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேரத் தகுதியுடைய மாணவர்கள் பட்டியல் ஜூலை முதல் தேதியில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ சோதனை இருக்கும். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து வகுப்புகள் தொடங்கும். தில்லி எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் வகுப்புகள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும்.

இந்தக் கல்வி நிலையங்களில் சேரக் கட்டணம் ரூ.1,628. தங்கும் விடுதிக் கட்டணம், மின் கட்டணம், உணவு விடுதி காப்பீட்டுத் தொகை, விடுதி பாதுகாப்புத் தொகை ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் ரூ.4,228 செலுத்த வேண்டியதிருக்கும். மருத்துவ சோதனைக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும். மத்திய அரசு கல்வி நிறுவனம் என்பதால் எம்பிபிஎஸ் படிப்புக்கு இந்த அளவு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மாற்றத்துக்கு உட்பட்டது.

இப்படிப்புகளில் சேர ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் கட்டணம் ரூ.800. பாரத ஸ்டேட் வங்கிகளில் கம்ப்யூட்டர் செலான் மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பிப்பதற்குக் கடைசி நாளான மார்ச் 24-ஆம் தேதியன்று விண்ணப்பிக்கும் மாணவர்கள் 26-ஆம் தேதிக்குள் வங்கியில் செலான் மூலம் கட்டணத்தைச் செலுத்திவிட வேண்டும். கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் போது எய்ம்ஸ் கல்வி நிறுவனம் தவிர, மற்ற 6 கல்வி நிறுவனங்களிலும் சேர தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றால், உங்களது விருப்பப்படி அந்த ஆறு கல்வி நிறுவனங்களை வரிசைப் படுத்தி விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டியது அவசியம்.  

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H