லயோலா கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக் கால பயிற்சி:
லயோலா கல்லூரியின் சார்பில் உயிரித்
தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் மற்றும் உயிர் பல்வகைத் தன்மை குறித்த
கோடைக் கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை
படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். மே மாதம் 6-ஆம் தேதி
முதல் 11-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உயிரித் தொழில்நுட்பம்,
இயற்கை வளங்கள் மற்றும் உயிர் பல்வகைத் தன்மை ஆகியவை குறித்த விரிவுரைகள்,
செய்முறைப் பயிற்சிகள், சோதனை மையங்கள், ஆய்வறிக்கை தயாரித்தல், அறிவியல்
விளக்கப் படங்கள் தயாரித்தல், அறிவியல் தகவல்களை நாடகமாக நடித்துக்
காட்டுதல் உள்ளிட்டவை மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதில் பங்கேற்பதற்கு மாணவர்கள் 3,000
ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாம் குறித்த கூடுதல்
தகவல்களைப் பெற www.loyalacollege.edu என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுபாஷை 90437 93818 என்ற தொலைபேசி
எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...