Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஒருவரின் ரெஸ்யூமை மேலோட்டமாக ஆராய, ஒரு பணி வழங்குநருக்கு, சராசரியாக 6
விநாடிகள் மட்டுமே ஆகிறது. எனவே, அத்தகைய மிகக் குறுகிய காலஅளவிற்குள்,
பணி வழங்குநரின் கவனத்தைக் கவர்ந்து, வாய்ப்பைப் பெறுவது தனிக் கலை.
ரெஸ்யூம் தயாரித்தலுக்கென்று, ஒரு
வழக்கமான முறை நெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சமீப
ஆண்டுகளில், அந்த முறையில் நிறைய மாறுதல்கள் வந்துவிட்டன. வேலைவாய்ப்பு
சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்கள், ரெஸ்யூம் தயாரிக்கும் முறையையும்
பெரியளவில் மாற்றிவிட்டன. கன்சல்டண்டுகளைப் பொறுத்தவரை, ஒரு நாளில்,
ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்களை கையாள்வதால், அவர்கள் நேரத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எனவே, உங்களின் ரெஸ்யூம், குறைந்த வினாடிகளுக்குள், கன்சல்டண்டுகளின்
கவனத்தைக் கவரும் வகையில், ரெஸ்யூம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொள்ள
வேண்டும்.
தொழில்நுட்ப சரிபார்ப்பு முறை
இன்றைய நிலையில், பொதுவாக, ரெஸ்யூம்கள், அப்ளிகேஷன் டிராக்கர் சிஸ்டம்
மூலமாக, சோதிக்கப்படுகின்றன. அந்த நிலையைக் கடந்து, ஒரு ரெஸ்யூம் சென்ற
பிறகுதான், அதை மனிதக் கண்கள் பார்க்கின்றன. எனவே, இந்த முதல் நிலையை
உங்கள் ரெஸ்யூம் கடப்பதை உறுதிசெய்ய, சரியான keywords -ஐ உங்களின் ரெஸ்யூம்
கொண்டுள்ளதா மற்றும் முறையான format -ல் உங்கள் ரெஸ்யூம்
வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
Keywords என்பது, ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறையில்
பயன்படுத்தக்கூடிய மொழி நடையாகும். அவற்றில், துறை, திறன்கள், பதவி மற்றும்
தேவையான கல்வித் தகுதிகள் போன்ற விபரங்கள் அடங்கும். Search filters, பணி
தேவைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட keyword -களால் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
எனவே, சரியான இடத்தில் keywords பயன்படுத்தல், சரியான எண்ணிக்கையில்
அவற்றைப் பயன்படுத்தல் போன்றவை, உங்கள் ரெஸ்யூமின் முக்கியத்துவத்தைப்
பெருமளவில் அதிகரிக்கும்.
ரெஸ்யூம் தயாரிப்பானது, தொழில்நுட்ப முறையில் இருக்க வேண்டும்.
அப்போதுதான், தொழில்நுட்ப அடிப்படையிலான ரெஸ்யூம் ஆய்வில், அடுத்த நிலைக்கு
செல்ல முடியும். தொழில்நுட்ப முறை தயாரிப்பு என்பது, சரியான fonts மற்றும்
font வடிவமைப்பு ஆகியவற்றை பயன்படுத்துதலை உள்ளடக்கியதாகும். இதன்மூலம்,
search engine, உங்கள் ரெஸ்யூமை எளிதாக ஆராயும். Graphs, tables, pictures,
special effects and fancy fonts ஆகியவற்றை கட்டாயம் பயன்படுத்த வேண்டாம்.
அப்போதுதான், எந்தவித சிக்கலுமின்றி, உங்களின் ரெஸ்யூம், அடுத்த
நிலைக்குச் செல்லும்.
ஆறே விநாடிகள்தான்...
ஒருவரின் ரெஸ்யூமில், சில நொடிகளில், வேலை வழங்குநர் பார்க்கும்
விஷயங்கள் என்னவெனில், விண்ணப்பதாரரின் இருப்பிடம், கடைசி 2 நிறுவனங்களில்,
அவர் வகித்த பதவிகள் மற்றும் கல்வித் தகுதிகள் போன்றவைதான். எனவே, இத்தகைய
ஜீவாதாரமான விஷயங்கள், வேலை வழங்குநருக்கு எளிதில் கிடைக்கும்படி செய்தல்
முக்கியம்.
பணி வழங்குநர்கள், ரெஸ்யூமை எவ்வாறு ஆராய்கிறார்கள் என்பதன் heap map -ஐ
உருவாக்க, eye tracking தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. முக்கிய
விஷயங்கள், ரெஸ்யூம் பக்கத்தின் இடதுபுறமாக, பெரிய எழுத்தில் இருக்கும்
என்பதை, mapping ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது. எனவே, தேவையற்ற விஷயங்கள்
இருந்தால், அவை தயவுதாட்சண்யமின்றி நிராகரிக்கப்பட்டு விடும்.
வெளிப்படுத்தும் திறன்கள்
உங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள, பணி வழங்குநர்களைத் தூண்டும்
விதமாக, ரெஸ்யூம் அமைய வேண்டும். குறிப்பிட்ட பணிக்குத் தேவையான
திறன்களும், கல்வித் தகுதிகளும் உங்களிடம் உள்ளன என்பதை உங்களின் ரெஸ்யூம்,
தெளிவாகவும், எளிதாகவும் வெளிப்படுத்த வேண்டும்.
உங்களின் பிரதான பணித்திறனை முதன்மைப்படுத்தியிருக்க வேண்டும்.
இதைத்தவிர, உங்களின் மென்திறன்களும் சிறப்பான முறையில்
தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மென்திறன்கள்தான், உங்களின் சம
அனுபவத்தையும், சமமான கல்வித்தகுதியையும் வைத்திருக்கும் ஒருவரிடமிருந்து,
உங்களை வேறுபடுத்திக் காட்டும். இந்த மென்திறன்கள்தான், உங்களின் பதவி
உயர்விலும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
ரெஸ்யூமில் ஏற்படும் பொதுவான தவறுகள்
பழைய சாதனைகளை, ரெஸ்யூமில், திரும்ப திரும்ப குறிப்பிடுவதைத் தவிர்க்க
வேண்டும். அதற்கு பதிலாக, சமீபத்திய சாதனைகள் மற்றும் அனுபவங்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு
பொருத்தமான தகுதிகள் உங்களுக்கு இருப்பதை, நீங்கள் சிறப்பாக தெரிவிக்க
வேண்டும். ஏனெனில், பணி வழங்குநர்கள், அதற்குத்தான் முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள்.
பெரியளவிலான எழுத்துக்கள், fancy fonts, எழுத்து மற்றும் இலக்கணப் பிழை
ஆகியவற்றை தவிர்க்கவும். ரெஸ்யூம்களில், அடிக்கடி காணப்படும் சில முக்கிய
தவறுகளாக சுட்டிக்காட்டப்படுபவை,
கல்வித்தகுதி பற்றிய விளக்கப் பகுதியில், படிப்பை முடித்த ஆண்டுகள்
குறிப்பிடப்படுவதில்லை. அதேபோல், பணி அனுபவம் பற்றிய விளக்கப் பகுதியில்,
மொத்த பணி அனுபவ ஆண்டுகள் குறிக்கப்படுவதில்லை.
ஆன்லைன் ரெஸ்யூம்
இந்த வகையில், சோஷியல் மீடியா முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில்,
இதுபோன்ற வசதிகளின் மூலம், விண்ணப்பதாரரைப் பற்றிய பல விபரங்களை, பணி
வழங்கும் நிறுவனங்கள் அறிந்து கொள்கின்றன. இந்த சோஷியல் மீடியாவின் மூலமாக,
ஒரு நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்திற்கு மாற விரும்பும் நபர்கள்,
அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். எனவே, Linkedin போன்ற தளங்களில்,
உங்களின் விபரங்கள் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பொருத்தமான keywords பயன்படுத்தி, உங்கள் ரெஸ்யூமை எளிதாக
கண்டுபிடித்தலையும் மற்றும் அனைத்து முக்கிய விபரங்களும், அதில் தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளதையும் உறுதிசெய்தல் அவசியம். இதன்மூலம், உங்களை, பணி
வழங்குநர், கட்டாயம் தொடர்பு கொள்வதை உறுதிசெய்ய முடியும்.
ஆன்லைன் மதிப்பை தக்கவைத்தல்
உங்கள் பெயரில் Google search செய்து, விபரம் தெரிவிக்கும் இணைப்புகளை
சரிபார்க்கவும். அந்த விபரங்களில், எவ்வித எதிர்மறை அம்சங்களும்
இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். எனவே, உங்களின் விபரங்களை
பதிவேற்றம்(upload) செய்யும் முன்பாக, ஒன்றுக்கு பலமுறை நன்றாக
சரிபார்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த வேலைவாய்ப்பு சந்தையில்,
சரியான ரெஸ்யூமே, ஒருவருக்கு சிறப்பான வாய்ப்புகளைப் பெற்றுத்தரும் என்பதை
நினைவில் வைக்க வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |