கணிதம் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை!
கணித நிறுவனத்தில், இளநிலை, முதுநிலை, பி.எச்டி., படிப்பு வழங்கப்படுகிறது. இந்நிறுவனத்தில் முழுவதும் கணிதம் தொடர்பான பாடங்களையே கற்பிக்கப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களிலும்
கணிதப் படிப்பை முடித்தவர்கள் மேற்படிப்புகளைத் தொடர வாய்ப்பு உள்ளது.
இப்படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் அதிக
வரவேற்பு உள்ளது.
பி.எஸ்சி (ஹானர்ஸ்)., இயற்பியல், கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய
இளநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்
சேர்க்கை நடைபெறும். +2வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்நுழைவுத்தேர்வை எழுத
முடியும்.
இப்படிப்புக்கு உதவித்தொகை மாதந்தோறும் ரூ.4000ம், இதர செலவுகளுக்கு ரூ.1000ம் வழங்கப்படுகிறது.
முதுகலை பட்டப் படிப்பில் எம்.எஸ்சி., கணிதம். கணினி அறிவியல்,
பயன்பாட்டுக் கணிதம் உள்ளிட்ட மூன்று பட்டப் படிப்புகள் வழங்கப்படுகிறது.
இப்படிப்பிற்கு இளநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த
படிப்பிற்கு கல்வி உதவித்தொகையாக ரூ.4800 வழங்கப்படுகிறது. இதர செலவுகள்
மாதந்தோறும் ரூ.5000 கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆராய்ச்சியில் கணிதம், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய படிப்புகளுக்கு
உதவித்தொகை வழங்கப்படுகிறது. இப்படிப்பில் சேர முதுகலை பட்டப் படிப்பில்
கணித பாடம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதல் இரண்டு வருடத்திற்கு ரூ.16,000ம், அடுத்த 3 வருடத்திற்கு
ரூ.18,000ம் வழங்கப்படுகிறது. இதை தவிர புத்தக செலவுக்கு ரூ.10,000
வழங்கப்படுகிறது.
உதவித்தொகை குறித்து விரிவன தகவல்கள் அறிய www.cmi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.