- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 18 May 2013

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்:

அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி ஆண்டில், வழக்கம் போல் இயங்கலாம்" என பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாமல், 2,000 பள்ளிகள் உள்ளன. இந்த பிரச்னையால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இதனால், வரும், ஜூன் 3ம் தேதி, 2,000 பள்ளிகளும் இயங்குமா, இயங்காதா என, கேள்விக்குறியாக உள்ளது.
இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், பதற்றத்தில் இருக்கின்றனர். தனியார் பள்ளிகளின் நில பிரச்னை குறித்து ஆய்வு செய்து, உரிய முடிவை எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஏற்கனவே ஒரு முறை கூடி, பிரச்னை குறித்து ஆய்வு செய்தது.
பள்ளி திறப்பதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், 2,000 பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கடந்த மார்ச், 31ம் தேதிக்குள், அங்கீகாரம் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரச்னை குறித்து முடிவு எடுக்க, போதிய கால அவகாசம் இல்லை என, பல்வேறு மாநில அரசுகளும், பள்ளி நிர்வாகங்களும், ஆர்.டி.இ., சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பிடம் தெரிவித்தன. இதனால், கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே, தமிழகத்தில், அங்கீகாரம் பெறாமல் உள்ள பள்ளிகள், மூட வேண்டும் என்பது அவசியம் இல்லை. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அந்த பள்ளிகளை மூட, நடவடிக்கை எடுக்க மாட்டோம். அந்த பள்ளிகள், வரும் ஜூன் மாதம், வழக்கம் போல் இயங்கலாம்.  மூன்று மாதத்திற்குள், பள்ளிகளுக்கான இடப் பிரச்னை குறித்து, ஒரு முடிவை, தமிழக அரசு எடுக்கும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.
பள்ளிகளை மூடமாட்டோம் என உயர் அதிகாரி, தெரிவித்தாலும், மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலர்கள், அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு, கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: உயர் அதிகாரியின் கருத்தை வரவேற்கிறோம். ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, கடும் குடைச்சல் தந்தபடி உள்ளனர். அங்கீகாரம் இல்லை.
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை; குடிநீர் வசதி இல்லை; கழிவறைகளில், டைல்ஸ் பதிக்கவில்லை என, பல காரணங்களைக் கூறி, பள்ளிகளை மூட, நெருக்கடி தருகின்றனர்.
இதன் காரணமாக, பல மாவட்டங்களில், பள்ளிகளை, அவர்களாகவே மூடி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில், 16ம் தேதி, ஒன்பது நர்சரி பள்ளிகளை, நிர்வாகிகளே மூடி உள்ளனர். துறையின் உத்தரவை, மாவட்ட அதிகாரிகள் மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H