Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
வெளிமாநிலங்கள் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு
கல்வி வசதி அளிக்கும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று, சட்டசபையில்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபை இன்று காலையில் கூடியதும், பேரவை விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது:–
54 தொடக்கப்பள்ளி
300 பேர் கொண்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து ஒரு கிலோமீட்டர்
தூரத்திற்குள் ஒரு தொடக்கப்பள்ளி அமைய வேண்டும். இதன் அடிப்படையில், கள
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள்
இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 54 குடியிருப்பு பகுதிகளிலும் புதிய தொடக்கப்பள்ளிகள்
அமைக்கப்படும். அவற்றுக்கு தேவைக்கேற்ப ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு
இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய நிதி மறுப்பு
5 கிலோமீட்டர் தொலைவிற்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்ற
அடிப்படையில், மத்திய அரசால் நிதி உதவி அளிக்கப்படாத நிலையிலும்,
மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியிலிருந்து இந்த கல்வி ஆண்டில் 50
நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இங்கு, பள்ளி
ஒன்றுக்கு ஒரு தலைமையாசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் மற்றும் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் வீதம் 250
பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
இதேபோன்று, இந்த நிதி ஆண்டில், 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, 100 தலைமை
ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஒன்றுக்கு ஒன்பது முதுகலை ஆசிரியர் வீதம் 900
முதுகலை ஆசிரியர் என மொத்தம் 1,000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
இதற்கென ஆண்டு ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்
தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்கள் பணிநிமித்தம்
இடம்பெயர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்களது
குடும்பங்களுடன் தற்காலிகமாக குடியேறுகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்த 6,081
தொழிலாளர்களின் குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த குழந்தைகளுக்கு கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தித்தரும் நல்ல
நோக்குடன் ‘‘இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வசதி
அளிக்கும் திட்டம்’’ என்ற புதிய திட்டம் நடப்பு ஆண்டில் இருந்து
செயல்படுத்தப்படும்.
இதன்படி, இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அவர்தம்
இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் முறையாக சேர்க்கப்படுவர்.
இவர்களுக்கு அவர்களது தாய் மொழியும் கற்பிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு
தோராயமாக 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
பாடநூல் கழகம் பெயர் மாற்றம்
மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்கள் தரமாகவும், குறித்த
காலத்திலும் வழங்கவேண்டும். இதைக்கருத்தில் கொண்டும், பள்ளி
கல்வித்துறையின் கீழ் செயல்படும் வெவ்வேறு இயக்ககங்கள் கல்வி சார்ந்த
பணிகளில் தனிக்கவனம் செலுத்தவேண்டும்.
இந்த அடிப்படையில், மாணவ–மாணவியருக்காக வழங்கப்படும் அனைத்து
பொருள்களையும் கொள்முதல் செய்து வினியோகிக்கும் பணி இனி வருங்காலங்களில்,
தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு வழங்கப்படும் என்பதையும், தமிழ்நாடு பாடநூல்
கழகம் கொள்முதல் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட ஏதுவாக ‘‘தமிழ்நாடு பாடநூல்
மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்’’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.
விளையாட்டு ஊக்குவிப்பு
மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்குவதற்காக
விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தருவது, பள்ளிகளில்
விளையாட்டுப்போட்டிகளை நடத்துவது, தேசிய அளவில் விளையாட்டுப்போட்டிகளில்
பதக்கம் வென்றவர்களை ஊக்குவிப்பது என பல்வேறு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு முதல் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில்
பங்கு பெறும் மாணவ–மாணவியருக்கு உதவி புரியும் வகையில், இதற்கென முதன்
முறையாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண் கல்வி
கல்வியிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள குடும்பங்களை சேர்ந்த
பெண் குழந்தைகள் மேல்நிலைப்படிப்பு படிப்பதற்கு ஏதுவாக, மத்திய–மாநில
அரசுகளின் நிதி உதவியுடன் 44 பெண்கள் விடுதிகள் கட்டுவதற்கு 2009–2010–ம்
ஆண்டு ஆணையிடப்பட்டது. இருப்பினும், ஒப்பளிக்கப்பட்ட தொகை இவ்விடுதிகள்
கட்ட போதுமானதாக இல்லை என்பதால், இந்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
மத்திய–மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளதை கருத்தில் கொண்டு, நான் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன், கூடுதல் நிதியை
அளிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்ள உத்தரவிட்டேன்.
தங்கும் விடுதி
மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராத சூழ்நிலையில், பெண்களுக்கான
விடுதிகள் உடனடியாக கட்டவேண்டி உள்ளது. இதன் அவசியத்தை கருத்தில் கொண்டு,
ஒவ்வொரு விடுதியிலும் 100 பெண்கள் தங்கக்கூடிய 44 பெண்கள் விடுதிகள்
கட்டத்தேவைப்படுகின்ற கூடுதல் நிதியான 31 கோடியே 46 லட்சம் ரூபாயை மாநில
அரசின் நிதியிலிருந்து உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு நான்
உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் 4,400 பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் 44 ஒன்றியங்கள் கல்வியில்
பின்தங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள
மாணவ–மாணவியரின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக 2012–13–ம் ஆண்டு 26
மாதிரி பள்ளிகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கிராமப்புற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய இந்த மாதிரி பள்ளிகளை தரமுடன்
உடனடியாக கட்டி முடிப்பதற்கு கூடுதல் நிதி உதவி தேவைப்படுவது எனது
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, இதற்கென
38 கோடியே 44 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்மூலம் 10,640 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள், கல்வியின் தரத்திலும், உள்
கட்டமைப்பிலும், விளையாட்டுத்துறையிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை
மாநிலமாக்க வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








