பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் 12ம் தேதி வெளியீடு:
பி.இ., ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை, நாளை (12ம் தேதி) காலை வெளியிடுகிறது. வரும் 21ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குகிறது. ஜூலை, 30ம் தேதி வரை கலந்தாய்வை நடத்தி, ஆகஸ்ட் 1ம் தேதி, வகுப்புகளை துவக்க, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு, 2.35 லட்சம் பி.இ.,
விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. எனினும், 1.89 லட்சம் மாணவர்கள் மட்டும்,
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அண்ணா பல்கலையிடம் சமர்ப்பித்தனர். இதில்,
மாணவர்கள், 1.14 லட்சம் பேர்; மாணவியர், 74 ஆயிரம் பேர். கடந்த, 5ம் தேதி,
ரேண்டம் எண்களை, அண்ணா பல்கலை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, 1.89 லட்சம் மாணவர்களின் ரேங்க் பட்டியலை, 12ம் தேதி
காலை, அண்ணா பல்கலை வெளியிடுகிறது. அண்ணா பல்கலை, ரேங்க் பட்டியலை
வெளியிட்டதும், மாணவர்கள், தங்களுடைய ரேங்க் விவரங்களை, www.annauniv.edu என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...