அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிரிவு வாரியாக எம்.பி.பி.எஸ். இடங்கள்:
தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றில், 322 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, மீதமுள்ள, 1823 இடங்கள், வரும், 19ம் தேதி துவங்கும் பொது கலந்தாய்வு மூலம், நிரப்பப்பட உள்ளன.
இவை தவிர, ஒரு அரசு பல்
மருத்துவக் கல்லூரியில், மாநில ஒதுக்கீடாக உள்ள, 85 பி.டி.எஸ்., இடங்களும்,
முதல்கட்ட கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும், 11 தனியார்
மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக உள்ள, 838 எம்.பி.பி.எஸ்.,
இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடான, 909
பி.டி.எஸ்., இடங்களும், கலந்தாய்வில் நிரப்பட உள்ளன.
தனியார் கல்லூரிகளில் பிரிவு வாரியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., இடங்கள் குறித்த விவரம், ஓரிரு நாளில் வெளியிடப்படும் என,
மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...