புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங் கட்டணம் வெளியீடு:
மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு கவுன்சிலிங் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.சென்டாக் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்க பெறாத மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் தங்களுடைய பெயர் இருப்பின் கவுன்சிலிங் நடைபெறும் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் வரும் மாணவர்கள், தி கன்வீனர், சென்டாக்,
புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகம் என்ற பெயருக்கு புதுச்சேரியில்
மாற்றத்தக்க வகையில் 850 ரூபாய்க்கு டி.டி.,எடுத்து வர வேண்டும்.
எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் 350 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது.
கவுன்சிலிங் வருபவர்கள், மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ்,
குடியிருப்பு, குடியுரிமை சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்று
திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகள்
எனில், அதற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...