பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் கருணை அடிப்படையில் நியமனம்:
பள்ளிக் கல்வித் துறையில் 400 பேர் விரைவில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி 2002-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம்
ஆண்டு வரை விண்ணப்பம் செய்தவர்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகங்களில்
தங்களுடைய பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கெனவே 1997-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு
வரை கருணை அடிப்படையிலான நியமனத்துக்குத் தகுதி வாய்ந்த 397 பேருக்கு பணி
நியமனம் வழங்கப்பட்டுள்ளது.








