குரூப்-4: விண்ணப்ப விவரங்களை இணையத்தில் சரி பார்க்கலாம்:
குரூப்-4 காலியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களின்
பெயர்கள் பட்டியலில் விடுபட்டால் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு
அதுகுறித்த விவரங்களை அனுப்புமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு
கட்டுப்பாட்டு அலுவலர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 5566
காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கு 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
சரியான முறையில் பதிவு செய்து, விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் சென்று விவரங்களைச் சரிபார்த்துக்
கொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய கட்டணங்களை
செலுத்தியும் பெயர் விடுபட்டிருந்தால் contacttnpscgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்க்காணும் விவரங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு
விரைவில் வெளியாகும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








