நெல்லை பல்கலைக்கழக தேர்வுகள் நவ.6ல் துவக்கம்:
நெல்லை பல்கலை., தேர்வுகள் நவம்பர் 6ம் தேதி துவங்குகின்றன.நெல்லை பல்கலை., மற்றும் பல்கலை.,யோடு இணைந்த கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர் 2013 செமஸ்டர் தேர்வுகள் வரும் நவ., 6ம் தேதி துவங்குகிறது. தனித்தேர்வு மாணவர்களுக்கு வரும் அக் 21ம் தேதி தேர்வு துவங்குகிறது.
தேர்வு கட்டணத்தை வரும் செப்.11ம் தேதி வரை அபராத கட்டணம் இல்லாமலும், செப்.18ம் தேதி வரை அபராத கட்டணத்துடனும் செலுத்தலாம்.
தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்ப படிவத்தினை தாங்கள்
படித்த கல்லூரியிலோ அல்லது தேர்வாணையர் அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு கட்டணத்தை பாரத ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பவர் ஜோதி
கணக்கு எண்: 32723644186 ல் செலுத்தி விண்ணப்பத்தினை தேர்வாணையருக்கு
வரும் செப்டம்பர் 25ம் தேதிக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.