மகளிர் பல்கலையில் எம்.பில் படிப்புக்கு அழைப்பு:
கொடைக்கானலில் உள்ள மதர் தெரசா மகளிர்
பல்கலைக்கழகத்தில், இக்கல்வியாண்டு முதல் எம்.பில்., படிப்புக்கு தகுதியான
மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பில்.,(ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், தமிழ், வரலாற்று படிப்பு,
டூரிசம் மேனஜ்மென்ட், லைப்ரரி அன்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், வணிகவியல்,
பெண்கள் கல்வி, சமூகவியல், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், புட் அன்ட்
நியூட்ரிஷன், பயோ-டெக்னாலஜி, மேலாண்மை படிப்பு)
கல்வித்தகுதி:
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எம்.எஸ்சி.,யில்
பயோ-டெக்னாலஜி, பயோ-கெமிஸ்ட், மைக்ரோபயாலஜி உள்ளிட்ட படிப்புகளில் 60
சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது எம்.பி.ஏ., எம்.காம், எம்.எஸ்சி, எம்.எம்.எஸ், எம்.எஸ்(ஐடி)
உள்ளிட்ட படிப்புகளில் 55 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சியடைந்திருக்க
வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களோடு கல்வி கட்டண வரைவோலை
இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.motherteresawomenuniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.








