- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அங்கன்வாடி பணியாளர்கள் தாங்கள் சமைத்த உணவை உண்டு பார்த்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்: ஆட்சியர்:

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் இருவரும் தாங்கள் சமைத்த உணவை உண்டு பார்த்து உணவில் எந்த விதமான விஷத்தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்த பின்புதான் குழுந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார்.


விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அங்கன்வாடி உதவியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பேசியதாவது:

சமுதாயத்தை மேனமையுறச் செய்யும் புனிதப் பணி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணி. நம் மையத்தில் நாம் ஆற்றும் பணிகள் எதிர்கால சந்ததிகளை உன்னத நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற திடமான இலக்கை நோக்கி ஒவ்வொரு அங்கன்வாடி உதவியாளரும் செயல்பட வேண்டும்.அங்கன்வாடி உதவியாளர்கள் தினந்தோறும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை மையத்தை விட்டு செல்லாமல் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே வீட்டுக்குச் செல்ல வேண்டும். சமையல் கூடத்தை தினமும் கழுவி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமையல் கூடத்தை சுற்றி கழிவுநீர் தேங்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கேஸ் அடுப்பு என்பதால் கேஸ் லீக் ஆகிறாதா என சோதனை செய்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க வேண்டும். சமையல் செய்யும் இடத்துக்குள் குழந்தைகள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்க வேண்டும்.

உணவு பொருள்கள் ஈரம், காற்று ஆகியவற்றால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பருப்பு வகைகளில் பூச்சி, வண்டுகள் பிடிக்காமல் இருக்க வாரம் தோறும் வெயிலில் உலர்த்த வேண்டும். இணை உணவு மிகவும் பாதுகாப்பான முறையில் ஈரம்படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் இணை உணவை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டும். சமைக்கப்படும் உணவு பொருள்களின் அளவு அரசால் நிர்ணயித்த அளவுக்கு குறையாமல் எடுத்து சமைக்க வேண்டும்.திறந்த வெளியில் சமைக்கக் கூடாது தினமும் காலையில் குழந்தைகள் வருகையினை குறித்து வருகைக்கு ஏற்றவாறு உணவு தயாரித்து, உணவு வழங்கும் நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே உணவு தயாராக இருக்க வேண்டும்.

உணவு பரிமாறப்படுவசதற்கு முன்னதாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் இருவரும் உணவினை உண்டு பார்த்து, உணவில் எந்த விதமான விஷத்தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்த பின்புதாந் குழந்தைகளை வட்டமாக அமரவைத்துவிட்டு, தட்டு மற்றும் கைகளை கழுவிவிட்டு உணவு அருந்த வைக்க வேண்டும். மரங்களின் கீழே அமர வைத்து உணவு வழங்கக் கூடாது. அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் தவிர மற்ற நபர்களால் சமைக்கப்பட்ட உணவினை பறிமாற அனுமதிக்கக் கூடாது.தினமும் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை மூடியுடன் உள்ள பீங்கான் பாத்திரத்தில் எடுத்து மூடி வைத்து மறுநாள் காலையில் அப்புறப்படுத்த வேண்டும். அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் முட்டைகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் 15 நிமிடம் வேக வைத்து முழு முட்டையாக மதிய உணவுடன் வழங்க வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். குழந்தைகள் வருகை மற்றும் வீடு சேர்வது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.பிரபாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம் மற்றும் அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H