மகளிர் தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதி மேம்படுத்த 15 நாள் கெடு:
அடிப்படை வசதிகளின்றி, பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் மகளிர் விடுதிகளுக்கு, "கிடுக்கிப்பிடி" போடும் நடவடிக்கைகளை, அரசு எடுத்துள்ளது. "15 நாட்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" என கெடு விதிக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு, பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவில் பெண்களும் வருகின்றனர். இவர்களை குறிவைத்து, சென்னையில், 500க்கும் மேற்பட்ட மகளிர் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன.
மாதந்தோறும் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கும் விடுதிகள், தரமான உணவு,
போதிய தண்ணீர் வசதி, அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என,
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, "சென்னையில் உள்ள மகளிர்
தங்கும் விடுதிகள், வேலை செய்யும் பெண்கள் தங்கும் விடுதிகள்,
விதிமுறைகளின் படி, 15 நாட்களில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என, உணவு
பாதுகாப்புத்துறை கெடு விதித்து, "நோட்டீஸ்" த்து வருகிறது.
சமையலறையிலிருந்து முறையான புகைபோக்கி போதுமான உறிஞ்சு திறனுடன் அமைக்க
வேண்டும். போதிய காற்றோட்ட வசதி செய்ய வேண்டும். சமையலறை முழுவதும்,
சுண்ணாம்பு, வண்ணம் பூச வேண்டும்.
தங்கியுள்ளோருக்கு போதிய பாதுகாக்கப்பட்ட குடிநீர் தர வேண்டும். போதுமான
எண்ணிக்கையில் குளிர்ந்த மற்றும் குடிநீர் வசதியுடன் கூடிய கை கழுவும்
கோப்பைகள் அமைக்க வேண்டும்.
உணவு பொருட்கள் கையாள்வோர் மருத்துவ சான்று பெற வேண்டும். தொப்பி,
கையுறை, முககவசம் அணிய வேண்டும். உணவு தயாரிக்க, குடிக்க தரும் தண்ணீரை,
பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
உணவு சாப்பிட தனியாக அறை ஒதுக்க வேண்டும். பாத்திரங்கள், சாதனங்களை
சுத்தம் செய்யவும், தொற்று நீக்கவும் தடையில்லாத தண்ணீர் வசதி செய்ய
வேண்டும். விடுதி பெண்களுக்கு, 10 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில்
கழிப்பறை, குளியலறை அமைக்க வேண்டும். இவ்வாறு, நோட்டீசில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன்
கூறுகையில், ""சென்னையில் உள்ள, 500க்கும் மேற்பட்ட மகளிர் தங்கும்
விடுதிகள், வேலை செய்யும் பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு முறைப்படி,
"நோட்டீஸ்" வழங்கப்பட்டு வருகிறது. 15 நாட்களில், விதிமுறைகளை மேம்படுத்த
வேண்டும். இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.







