பேருந்து வசதி இல்லாததால் 7 கி.மீ., நடந்து செல்லும் மாணவர்கள்:
பள்ளி முடியும் நேரத்தில், பேருந்து வசதி இல்லாததால், திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி பள்ளி, இதனால், உடல் சோர்வு ஏற்பட்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.நிலக்கோட்டை தாலுகா, குல்லிசெட்டிபட்டி, சிவஞானபுரம், போடியகவுண்டன்பட்டி, லட்சுமிபுரம், புதூர் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், அணைப்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளி செல்லும் நேரத்தில், வத்தலக்குண்டிலிருந்து, அரசு பேருந்து இயக்கப்படுகிறது. மாலையில் பள்ளி, 4:15 மணிக்கு முடிவடைகிறது, அப்போது பேருந்து வசதியில்லை. மாலை, 5:45 மணிக்கு தான் பேருந்து இயக்கப்படுகிறது.
இதனால், மாணவர்கள், பள்ளி முடிந்தவுடன், 4 முதல் 7 கி.மீ., வரை நடந்தே
வீடுகளுக்குச் செல்கின்றனர். சிலர் அவ்வழியாகச் செல்லும் இருசக்கர
வாகனங்களில் ஏறிச்செல்கின்றனர்.
இதுகுறித்து புதூரைச் சேர்ந்த மாணவர்கள் கூறியதாவது: நடந்த வருவதால்
வீட்டிற்குச் சென்றவுடன் சோர்வு ஏற்படுகிறது. அன்றாட பாடங்களைப் படிக்க
முடிவதில்லை. பலமுறை பேருந்து விடக்கோரி போராடியும் பலன் இல்லை. பள்ளி
விடும் நேரத்தில் நிலக்கோட்டையிலிருந்து, குல்லி செட்டிபட்டிக்குப்
போக்குவரத்து நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி, பேருந்து இயக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.







