பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி:
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான, வினாடி வினா போட்டிக்கு சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குனர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பல்வேறு மருத்துவ வசதிகளை எல்லா தரப்பு மக்களுக்கும் அளித்து வருகிறது. இதனை பொதுமக்கள் அறியும் வண்ணம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல விழிப்புணர்வுவை சார்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வினாடி வினா போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள்,
கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் உள்பட
கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்,
தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
வினாடி வினா போட்டி தலைப்புகள்
"தெரிந்து கொள்வோம் புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப
நலத்துறையின் மருத்துவ காரிய திட்டங்கள்", பகுதி 2, "தெரிந்துகொள்வோம்
மருத்துவ கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும்", பகுதி 3 "வரும் முன்
காத்துக்கொள்வோம் நோய் தடுப்பு முறைகளும் சுகாதார வாழ்வும்", பகுதி 4
துரித வினாவிடை "சுகாதாரம் குடும்ப நலம்" பற்றிய பொது அறிவு கேள்விகள்.
கடிதம் கிடைக்கப்பெறாத அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகள் இந்த அறிவிப்பினையே வேண்டுகோளாக ஏற்று தங்கள் கல்வி நிறுவனங்களை ddiecpdy@gmail.com, vaithyasm@gmail.com என்ற இ-மெயிலில் வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளும் படி கேட்டு கொள்ளப்படுகிறது.
இது குறித்து ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் 94427 87665,
76394 37043 ஆகிய மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராமன்
கூறினார்.