"கலை அறிவியலில் கலாச்சார வேறுபாடுகள் இல்லை"
"நாட்டுக்கு நாடு கலாச்சார வேற்றுமைகள் உள்ளது. ஆனால் கலை அறிவியலை பொறுத்தவரை அந்த வேறுபாடு இல்லை" என்று நாகர்கோவில் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் நியூயார்க் பல்கலைகழக பேராசிரியர் கூறினார்.குமரி கலை அறிவியல் கழகம் சார்பில் நாகர்கோவில் ஸ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரியில் இரண்டு நாள் சர்வதேச ஆராய்ச்சி கருத்தரங்கம் தொடங்கியது. நியூயார்க் பல்கலைகழக பேராசிரியர் எரிக்மில்லர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
"நாட்டுக்கு நாடு கலாச்சார வேற்றுமைகள் உள்ளது. ஆனால் கலை
அறிவியலை பொறுத்தவரை அந்த வேறுபாடு இல்லை. கலையும் அறிவியலும் இணைந்து
செயல்பட கூடியது. தற்போதைய சூழ்நிலையில் உலக அளவிலான ஆராய்ச்சிகளுக்கு தேவை
அதிகரித்துள்ளது. அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி நடத்த வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது.
காணி இன மக்கள் வாழும் பகுதிகளில் அரிய மூலிகைகள் உள்ளது.
இதன் பயன் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். காணி இன மக்கள் மூலிகைகள்
பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதால் அவர்களையும் ஆராய்ச்சியில்
ஈடுபடுத்த வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் பேசிய கூடங்குளம் அணுமின்நிலைய தலைமை பொறியாளர் ஜாய் பேசியதாவது:
"இன்றைய சூழ்நிலையில் அணுவின் தேவை அதிகரித்துள்ளது.
பல்வேறு நாடுகளும் இதை உணர்ந்துள்ளது. எதிர்காலத்தில் இதன் தேவை இன்னும்
அதிகரிக்கும். கூடங்குளம் அணுமின்நிலையம் உலகதரம் வாய்ந்தது. மிகவும்
பாதுகாப்பானது. இதுபற்றி யாரும் அச்சமடைய வேண்டியதில்லை. எதிர்காலத்தில்
இந்தியாவே நேரடியாக அணுமின்நிலையத்தை நிறுவமுடியும்." இவ்வாறு அவர்
பேசினார்.
கல்லூரி முதல்வர் மற்றும் பல்வேறு துறை ஆராய்ச்சியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.