பார்வைகுறைபாடுள்ளமாணவர்கள்படிப்பதற்கு"மேக்னிபையர்" கருவி:
பார்வைகுறைபாடுள்ள மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக பாக்கெட் அளவு "வீடியோ மேக்னிபையர்" கருவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.பார்வை குறைபாடுள்ளவர்கள், "மேக்னிபையர்" கருவி மூலம் எளிதாக புத்தகத்திலுள்ள எழுத்துக்களை படிக்கலாம். இக்கருவியின் விலை ரூ.10,500. அனைத்து மாவட்டங்களிலும் இக்கருவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இக்கருவி வழங்கப்படுகிறது. பார்வைகுறைபாடுள்ள மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து பெறலாம்.
ஆர்.ஜனனி, (எம்.வி.எம். கல்லூரி மாணவி, திண்டுக்கல்: "பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் இலவசமாக "மேக்னிபையர்" கருவி கொடுத்துள்ளனர். இதன்மூலம், பாடபுத்தகங்களை எப்படி படிப்பது என்பதை அறிந்துகொண்டேன். இனி அடுத்தவர் துணையின்றி பாடபுத்தகங்களை எளிதாக படிக்க முடியும் என நம்புகிறேன்," என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...