குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகை:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் பயின்று தற்போது உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதுகுறித்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேசிய குழந்தைத்தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலை பட்டம், பொறியியல் படிப்பு, பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் ஆகிய மேற்படிப்பினை படிக்கும் மாணவ,மாணவியருக்கு தமிழ்நாடு அரசு மாதம்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கிவருகிறது.
2013-14ம் கல்விஆண்டிற்கான உதவி தொகை கோரி தகுதி உள்ள மாணவ,
மாணவியர்கள் வரும் 15ம் தேதிக்குள் மனுவினை திட்ட இயக்குநர், தேசிய
குழந்தை தொழிலாளர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம்,
தூத்துக்குடி என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். இவ்வாறு அந்த செய்தி
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







