100க்கும் மேற்பட்ட ஐ.ஐ.டி., மும்பை பட்டதாரிகள், பல்வேறான பன்னாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு corresponding எண்கள் சுமார் 80 என்பதாக இருந்தது.
டிசம்பர் 19ம் தேதி பணியமர்த்துதலின் முதல் கட்டம் நிறைவடைந்தது.
இதன்படி, 889 மாணவர்கள் பணி வாய்ப்புகளைப் பெற்றனர். பன்னாட்டு
கம்பெனிகளைப் பொறுத்தவரை, ஐரோப்பா, ஜப்பான், கொரியா, மத்திய கிழக்கு,
சிங்கப்பூர், தைவான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
நிறுவனங்கள், இந்தாண்டு IIT - Mumbai வளாகத்திற்கு வந்தன.
265 மாணவர்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலும், 249
மாணவர்கள், மென்பொருள் மற்றும் ஐ.டி., துறையிலும் தங்களுக்கான பணிகளை
தேர்வு செய்துள்ளனர். இதைத்தவிர, மொத்தம் 23 மாணவர்களுக்கு, பல்வேறான கல்வி
நிறுவனங்கள், (டாக்டோரல் பட்டதாரிகள் உட்பட) ஆசிரியர் பணி வாய்ப்புகளை
அளித்துள்ளன.