6 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மனிதவள அமைச்சர்:
நாடெங்கிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை, 6 லட்சம் என்ற அளவில் உள்ளது. இந்தக் குறையைப் போக்கி, தரமான கல்வியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மத்திய மனிதவள அமைச்சர் பல்லம் ராஜு கூறினார்.
அவர் கூறியதாவது: பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆசிரியர்களை
பணியமர்த்துவது, பெண்கள் மற்றும் சிறுபான்மையின சமூக மாணவர்களை,
பள்ளிகளில் அதிகம் சேருமாறு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் நாம் சில
நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், தரமான கல்வி என்ற அம்சத்தின்பால் அதிக
கவனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
அதுதொடர்பாக எழும் புகார்கள் களையப்படும். அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட
பிறகு, பள்ளிக் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார்.







