Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆதார்
எண்ணை பயன்படுத்தி அதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியம்
வழங்கும் திட்டம் காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட
உள்ளது. அந்த மாவட்ட வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு அனுப்பப்பட்ட
எஸ்.எம்.எஸ், சென்னை பகுதி வாடிக்கையாளர்களுக்கும் வந்து விட்டதாக இந்தியன்
ஆயில் நிறுவன உயர் அதிகாரி கூறினார்.
இண்டேன் வாடிக்கையாளர்கள் சென்னையை
சேர்ந்த இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு கடந்த 2
நாட்களாக ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்,) வந்து கொண்டிருக்கிறது.அதில்
“அன்புள்ள இண்டேன் வாடிக்கையாளரே, எல்.பி.ஜி, (சமையல் கியாஸ்) மானிய
தொகையை உங்கள் வங்கிக்கணக்கில் பெற உங்களது ஆதார் அட்டை எண்ணை சமையல்
எரிவாயு விநியோகஸ்தரிடமும், வங்கியிலும் சமர்ப்பிக்கவும்” என
தெரிவிக்கப்பட்டிருந்தது.குழப்பமும், அதிர்ச்சியுமடைந்தனர்ஆனால்
கடந்த 7-ந்தேதி பெங்களூரில் நடந்த கூட்டத்தில், மத்திய பெட்ரோலியத்துறை
அமைச்சர் வீரப்ப மொய்லி பேசும் போது, “சமையல் கியாஸ் சிலிண்டருக்கான
மானியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை” என தெரிவித்திருந்தார்.இந்நிலையில்
சென்னை வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி அனைவரையும்
குழப்பதிற்கு உள்ளாக்கியதுடன், அதிர்ச்சி அடைய வைத்தது. காரணம்
சென்னை மாநகர பகுதியை பொறுத்தமட்டில் இதுவரை ஆதார் அட்டைக்கான புகைப்படம்
எடுக்கும் பணி முழுமை பெறவில்லை. பெரும்பாலான இடங்களில் ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கையில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி நடந்து
முடிந்ததுடன், பின்னர் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் மையங்களையே
காணமுடியவில்லை. புகைப்படம் எடுத்தவர்களுக்கும் ஆதார் அட்டைகள் வந்து
சேரவில்லை.இந்நிலையில் இதுகுறித்து விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது அது குறித்து சரியான தகவல்களை அவர்களால் அளிக்க முடியவில்லை. காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்கள்இதுகுறித்து சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி வெற்றி செல்வகுமார் கூறியதாவது:-தமிழகத்தில்
அரியலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 5
மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எடுக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை எண்ணை
அடிப்படையாக வைத்து சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகை வழங்குவதற்கான
அடிப்படைப்பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் வரும் 1-ந்தேதி முதல்
காஞ்சீபுரம், வேலூர் மாவட்ட சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கும்
மானியத்தொகை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன.அன்று தொடங்கி
90 நாட்கள் கழித்து அனைத்து சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக
அவர்களுடைய வங்கி கணக்கிற்கு மானியத்தொகை போய்விடும். அதற்கு பிறகு சமையல்
கியாஸ் சிலிண்டர், தற்போது வாங்குவது போல் மானிய விலையில் வாங்க முடியாது,
சிலிண்டர் வாங்கும் போது முழுதொகையும் செலுத்தியே வாங்க வேண்டும்.சென்னை வாசிகளுக்கு பொருந்தாதுஇந்த
2 மாவட்டங்களும் சென்னை பகுதி அலுவலகத்தின் கீழ் தான் வருகிறது.
காஞ்சீபுரம், வேலூர் மாவட்ட மக்களுக்கு செல்போன் மூலம் போய் சேரவேண்டிய
குறுஞ்செய்தி தகவல், சென்னையில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் போய்
சேர்ந்துவிட்டது.அந்த 2 மாவட்டங்களை தவிர மற்ற பகுதியில் உள்ளவர்கள்
குறிப்பாக சென்னை பகுதி வாடிக்கையாளர்களுக்கு இந்த குறுஞ்செய்தி தகவல்
பொருந்தாது.இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








