இது, சென்ற நிதி ஆண்டின் வசூலை (ரூ.5.65 லட்சம் கோடி) காட்டிலும் 18 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில், முதல் ஒன்பது மாதங்களில் வசூலான நேரடி வரி இலக்கில் 72 சதவீதமாக உள்ளது.நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையை 4.8 சதவீதமாக வைத்து இருப்பதில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உறுதியாக உள்ளார்.எனவே, வரி வசூலை அதிகரிக்கும் வகையில் வருமான வரித் துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, கடந்த 2010-11 மற்றும் 2011-12-ஆம் நிதி ஆண்டுகளில் அதிக மதிப்பில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களின் மீது வருமான வரித் துறையின் கவனம் திரும்பியுள்ளது. இவர்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 23 லட்சம் பேரை வருமான வரித் துறை அடையாளம் கண்டுள்ளது.மார்ச் மாதத்திற்குள்...மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், “வருமான வரியை செலுத்த தவறியவர்களிடமிருந்து மார்ச் மாதத்திற்குள் தொகையை வசூலிக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் பற்றிய விவரம் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.வருமான வரித் துறை ஏற்கனவே இது தொடர்பாக 2.45 லட்சம் பேருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.